கோப்புப் படம் 
தற்போதைய செய்திகள்

543 மக்களவைத் தொகுதிகளிலும் கடவுச்சீட்டு சேவை மையம்!

543 மக்களவைத் தொகுதிகளிலும் பாஸ்போர்ட் சேவை மையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டதைப் பற்றி...

DIN

இந்தியாவின் 543 மக்களவைத் தொகுதிகளிலும் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) சேவை மையம் அமைக்கப்படும் என மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா அறிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் குணா மாவட்டத்தில் நேற்று (ஜன.11) கடவுச்சீட்டு சோவை மையத்தை திறந்து வைத்தப்பின் பேசிய அவர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் 543 மக்களவைத் தொகுதிகளிலும் கடவுச்சீட்டு சேவை மையம் திறக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தை இந்திய அஞ்சல் துறை, வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் உதவியோடு செயல்படுத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: விவேகானந்தரின் கனவை நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளோம்: பிரதமர் மோடி

இதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் சுமார் 6,000 தபால் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியாவின் பாரம்பரியப் பழக்கமான கடிதம் எழுதுவதை மக்கள் மீண்டும் பின்பற்ற வேண்டும் என அவர் கூறியுள்ளார். தற்போது, இந்தியாவிலுள்ள தபால் நிலையங்களில் பல்வேறு தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா மத்தியப் பிரதேசத்தின் குணா தொகுதியில்தான் போட்டியிட்டு வென்றார். அப்பகுதி மக்கள் கடவுச்சீட்டு சேவைக்காக தொலைவிலுள்ள போப்பால், குவாலியர் ஆகிய நகரங்களுக்கு பயணம் செய்யவேண்டி இருந்த சூழலில் தற்போது திறக்கப்பட்டிருக்கும் கடவுச்சீட்டு சேவை மையம் அம்மக்களின் பிரச்சனையைத் தீர்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தாண்டு (2025) மத்தியப் பிரதேசத்தில் 6 புதிய கடவுச்சீட்டு சேவை மையங்கள் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

அரையாண்டில் 5% சரிந்த வீடுகள் விற்பனை

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT