கோப்புப் படம் 
தற்போதைய செய்திகள்

குஜராத்: சிறுத்தை தாக்கியதில் 7 வயது சிறுமி பலி!

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் சிறுமி பலியானதைப் பற்றி...

DIN

குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் சிறுத்தை தாக்கியதில் 7 வயது சிறுமி பலியானார்.

அம்ரேலியின் சித்ரசார் கிராமத்திலுள்ள பருத்தி தோட்டத்தில் நேற்று (ஜன.12) மாலை வேலை செய்து வந்த அவரது பெற்றோருக்கு உதவி செய்வதற்காக 7 வயதுடைய சிறுமி ஒருவர் சென்றுள்ளார். அப்போது அந்த தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தையொன்று அந்த சிறுமி மீது பாய்ந்து தாக்கியுள்ளது.

இந்த தாக்குதலில் சிறுமியின் கழுத்துப் பகுதியில் காயங்கள் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அம்மாவட்டத்தின் ஜாப்ராபாத் பகுதியிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இருப்பினும், அந்த சிறுமி சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக பலியானார்.

இதையும் படிக்க: 2025 - 26 ல் நாட்டின் பணவீக்கம் 4.3% - 4.7% ஆக இருக்கும்: தகவல்

இந்த சம்பவம் அறிந்த ராஜுலா சட்டமன்ற உறுப்பினர் ஹிரா சோலன்கி, சிறுமியைத் தாக்கிய சிறுத்தையை உடனடியாகப் பிடிக்க வனத்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், வனத் துறையினர் 8 குழுக்கள் அமைத்து அப்பகுதியின் பல்வேறு இடங்களில் அந்த சிறுத்தையைப் பிடிக்க கூண்டுகள் அமைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் சிறுத்தைகளின் தாக்குதல் கடந்த சில காலமாக அதிகரித்து வருவதினால் கிராமவாசிகள் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT