வாட்ஸ் ஆப் (கோப்புப்படம்) 
தற்போதைய செய்திகள்

ஆந்திரத்தில் வாட்ஸ் ஆப்பில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள்!

ஆந்திரத்தில் வாட்ஸ் ஆப் செயலியின் மூலம் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள்.

DIN

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் வாட்ஸ் ஆப் செயலியின் மூலம் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை வழங்கும் சேவை விரைவில் தொடங்கப்படவுள்ளது.

இத்திட்டத்திற்கான செயல்முறையானது இம்மாத இறுதியில் தெனாலியில் தொடங்கப்படும் என்று ஆந்திர மாநிலத்தின் தலைமைச் செயலாளர் விஜய் ஆனந்த் தெரிவித்தார்.

முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் நடவடிக்கையின் பேரில் பொதுமக்களுக்கான சேவைகள வாட்ஸ் ஆப் மூலம் வழங்க மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக வாட்ஸ் ஆப் செயலி மூலம் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை எளிதாக பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்கான பல்வேறு துறை அதிகாரிகளுடனான நிர்வாகக் கூட்டம்(ஆர்டிஜிஎஸ்) திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையும் படிக்க: சத்தீஸ்கரில் 14 நக்சல்கள் சுட்டுக் கொலை!

மக்களுக்கான சேவைகளை வாட்ஸ் ஆப் செயலின் மூலம் வழங்குவதால் அவர்களுக்கு வசதியாகவும், எளிதாக அணுகக்கூடிய வகையில் இருக்கும் என்பதை நோக்கமாக கொண்டு முதல்வர் செயல்படுகிறார் என்று விஜய் ஆனந்த் வலியுறுத்தினார்.

சம்பத்தப்பட்ட அதிகாரிகள் இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்கான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதனை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு பஞ்சாயத்து, மருத்துவம், நகராட்சி நிர்வாகத் துறைகள் ஆர்டிஜிஎஸ் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலக புகைப்பட தின விழிப்புணா்வுப் பேரணி

தெற்கு மாவடத்தில் உள்ள மருந்துக் கடைகளில் சிசிடிவி கேமராக்களை நிறுவ தில்லி அரசு உத்தரவு

செவிலியா் பயிற்சியாளா்களுக்கு உதவித் தொகை உயா்வு

சிஎம் ஸ்ரீ பள்ளிகளுக்கு 50,000 விண்ணப்பம் வரவேற்பு

தெரு நாய் பிடிக்க வந்தவா்கள் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT