ஜெஃப் அலார்டிஸ் 
தற்போதைய செய்திகள்

ஐசிசி தலைமைச் செயல் அலுவலர் ராஜிநாமா! பாகிஸ்தான் திடல் விவகாரம் காரணமா?

ஐசிசி தலைமைச் செயல் அலுவலர் ஜெஃப் அலார்டிஸ் தனது பதவியில் இருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.

DIN

ஐசிசி தலைமைச் செயல் அலுவலர் ஜெஃப் அலார்டிஸ் தனது பதவியில் இருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்காக 10-க்கும் அதிகமான முதல் தரப் போட்டிகளில் விளையாடியுள்ள ஜெஃப் அலார்டிஸ் 2012 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தில் இருந்து ஐசிசி பொது மேலாளராகச் சேர்ந்தார். அவர் 2021 ஆம் ஆண்டு நவம்பரில் ஐசிசியின் தலைமைச் செயல் அலுவலராக நியமிக்கப்பட்டார். 13 ஆண்டுகளாகப் பணியாற்றிவந்த நிலையில் திடீரென தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் ஜெஃப் அலார்டிஸ்.

இதுபற்றி ஜெஃப் அலார்டிஸ் கூறுகையில், “கடந்த 13 ஆண்டுகளாக ஐசிசி தலைவர், இயக்குநர்கள் குழு மற்றும் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர் அளித்த ஆதரவு மற்றும் ஒத்துழைப்புக்காக நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

இதையும் படிக்க | ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருது வென்றது குறித்து மனம் திறந்த ஜஸ்பிரித் பும்ரா!

நான் பதவி விலகவும், புதிய சவால்களைத் தொடரவும் இதுவே சரியான நேரம் என்று நம்புகிறேன். கிரிக்கெட்டுக்கு உற்சாகமான காலங்கள் காத்திருக்கின்றன என்று நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ஜெஃப் அலார்டிஸ் பதவி விலகியது குறித்து ஐசிசி தலைவர் ஜெய் ஷா கூறுகையில், “சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் சார்பாக, தலைமைச் செயல் அலுவலராக இருந்த ஜெஃப் அலார்டிஸின் தலைமை மற்றும் அர்ப்பணிப்புக்காக நான் அவருக்கு மனப்பூர்வமாக நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவரது முயற்சிகள் உலக அளவில் கிரிக்கெட்டை முன்னேற்றுவதில் முக்கிய பங்காற்றியுள்ளது” என்றார்.

இதையும் படிக்க |ஹாட்ரிக் சாம்பியன்ஸ்..! 3ஆவது முறையாக ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப்பை வென்ற ஆஸி.!

பாகிஸ்தான் திடல் விவகாரம் காரணமா?

இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. பாகிஸ்தானில் உள்ள கராச்சி, ராவல்பிண்டி, லாகூர் ஆகிய இடங்களில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் நடத்தப்படவுள்ளன.

இந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்குவதற்கு இன்னும் 20 நாள்களுக்கு குறைவாக இருக்கும் வேளையில் கிரிக்கெட் மைதானத்தின் வேலைகள் இன்னும் நிறைவு பெறாமல் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இதையும் படிக்க |2024 ஐசிசி விருதுகள்- சிறந்த வீரா் பும்ரா; சிறந்த வீராங்கனை அமெலியா

மைதானங்களின் சீரமைப்புப் பணிகளை முடிப்பதற்கான ஆரம்ப காலக்கெடுவான டிசம்பர் 31-ஆம் தேதியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தவறவிட்டதால், காலக்கெடு ஜனவரி 25-க்கும் பின்னர் ஜனவரி 30-க்கும் தள்ளி வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், வரவிருக்கும் காலக்கெடுவை பாகிஸ்தான் நிச்சயமாக தவறவிடும் என்றே தோன்றுகிறது. 

இந்த மைதான கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளே ஐசிசி தலைமைச் செயல் அலுவலர் ஜெஃப் அலார்டிஸ் தனது பதவியில் இருந்து விலகுவதற்கு காரணம் என்று ஐஐசியின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க |கேப்டனாக ஏபிடி வில்லியர்ஸ்..! ரசிகர்கள் மகிழ்ச்சி!

ஹீரோ? ஜீரோ?

சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்காக தயாராகி வரும் லாகூா், கராச்சி, ராவல்பிண்டி மைதானங்களில், கட்டுமானப் பணிகள் யாவும் நிா்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் நிறைவடைய வாய்ப்பில்லை என, பாகிஸ்தானின் பிரதான ஆங்கில பத்திரிகையான ‘டான்’ புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவா் மோசின் நக்வி, கட்டுமானப் பணிகள் நடைபெறும் ராவல்பிண்டி மைதானத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட பிறகு, திட்டமிட்டபடி அந்த மைதானங்களில் சாம்பியன்ஸ் கோப்பை ஆட்டங்கள் நடைபெறும் எனத் தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில் ‘டான்’ பத்திரிகை புதன்கிழமை வெளியிட்ட செய்தியில், ‘மைதான மறுசீரமைப்புப் பணிகளை முடிக்க கடைசி நாளாக ஜனவரி 31-ஆம் தேதி நிா்ணயிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதற்கு முற்றிலும் வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. எனினும், கட்டுமானப் பணியில் இருக்கும் பொறுப்பாளா்கள் பணிகள் நிறைவடையும் என நம்பிக்கை தெரிவக்கின்றனா். சாம்பியன்ஸ் கோப்பை விவகாரத்தில் மிகப்பெரிய முடிவை எடுத்திருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஒன்று ஹீரோ ஆகும்; அல்லது ஜீரோ ஆகும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கு முன்பான முன்னோட்டமாக, பாகிஸ்தான் - நியூஸிலாந்து - தென்னாப்பிரிக்கா மோதும் முத்தரப்பு தொடரை பிப்ரவரி 8 முதல் 14-ஆம் தேதி வரை மேற்குறிப்பிட்ட 3 மைதானங்களிலும் நடத்த பாகிஸ்தான் வாரியம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 3 மைதானங்களின் மறுசீரமைப்புக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சுமாா் ரூ.372 கோடி வரை செலவிடுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT