4 வங்கதேசப் பெண்கள் கைது! வீட்டு உரிமையாளருக்கு வலைவீச்சு!
மகாராஷ்டிரத்தில் சட்டவிரோதமாக குடியேறிய 4 வங்கதேசப் பெண்கள் கைது செய்யப்பட்டதைப் பற்றி...
மகாராஷ்டிர மாநிலம் தாணேவில் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் குடியேறிய 4 வங்கதேசத்து பெண்களை கைது செய்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் மனோர்பாடாவில் உள்ள உள்ளூர் அமைப்பின் மறுவாழ்வு குடியிருப்பில் கடந்த ஜன.28 அன்று சோதனை மேற்கொண்டனர்.
இதையும் படிக்க: மோடியும், கேஜரிவாலும் இடஒதுக்கீடுக்கு எதிரானவா்கள்: ராகுல் காந்தி
Advertisement
Advertisement
அப்போது, அங்கு 38 முதல் 50 வயது வரையிலான நான்கு வங்கதேசத்து பெண்கள் வாடகை வீடெடுத்து தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது இந்தியாவில் அவர்கள் தங்கியதற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை எனக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அவர்கள் 4 பேர் மற்றும் அவர்கள் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரின் மீதும் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து அவர்கள் நால்வரையும் கைது செய்தனர். மேலும், தலைமறைவான அவர்கள் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரை தேடி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.