பிரதமர் நரேந்தி மோடி 
தற்போதைய செய்திகள்

வீரர்களின் தியாகங்கள் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும்: மோடி

கார்கில் போரில் நமது வீரர்கள் செய்த தியாகங்கள் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும்

தினமணி செய்திச் சேவை

புது தில்லி: கார்கில் போரில் நமது வீரர்கள் செய்த தியாகங்கள் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும். விஜய் திவாஸ், இந்தியத் தாயின் துணிச்சலான மகன்களின் ஒப்பற்ற துணிச்சலையும், வீரத்தையும் நமக்கு நினைவூட்டுகிறது என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

கார்கில் விஜய் திவாஸை முன்னிட்டு கார்கில் போரில் தைரியத்துடனும் வீரத்துடனும் போராடிய வீரர்களின் தியாகங்களை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை நினைவு கூர்ந்தார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

நாட்டு மக்களுக்கு கார்கில் வெற்றி நாள் வாழ்த்துகள்."கார்கில் போரில் நாட்டின் பெருமையைப் பாதுகாக்க தங்கள் உயிரை அர்ப்பணித்த இந்தியத் தாயின் துணிச்சலான மகன்களின் ஒப்பற்ற துணிச்சலையும் வீரத்தையும் இந்த நிகழ்வு நமக்கு நினைவூட்டுகிறது.

தாய்நாட்டிற்காக அனைத்தையும் தியாகம் செய்ய வேண்டும் என்ற அவர்களின் ஆர்வம் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும்" ஜெய் ஹிந்த்! என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

கடந்த 1999-ஆம் ஆண்டு, பாகிஸ்தானுடன் நடைபெற்ற கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த போரில் பங்கேற்று நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களைப் போற்றும் வகையில், ஆண்டுதோறும் ஜூலை 26-ஆம் தேதி கார்கில் வெற்றி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இது நாட்டு மக்களின் இதயத்தில் பெருமையுடனும், புனிதமான நினைவுகளுடனும் பொறிக்கப்பட்டிருக்கும் ஒரு நாள்.

PM Modi said that sacrifices made by the jawans will continue to inspire every generation.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு: உபரி நீர் மதகுகள் மூடல்!

பிரிட்டன் அமைச்சரைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்!

ஜிஎஸ்டி குறைப்பு வரவேற்கத்தக்கது; ஆனால், பிகார் தேர்தல் காரணமா? - காங்கிரஸ் கேள்வி

விஜய் வியூகம் வெற்றி பெறுமா? - அா்ஜுன் சம்பத்

மீட்புப் பணி போட்டி: முதலிடம் பெற்ற ஊா்க்காவல் படையினருக்கு பாராட்டு

SCROLL FOR NEXT