தற்போதைய செய்திகள்

2026 நவம்பர் முதல் சிஎன்ஜி, மின்சார பேருந்துகளுக்கு மட்டும் தில்லியில் அனுமதி

சிஎன்ஜி, மின்சாரம் மற்றும் பிஎஸ் 6 டீசல் ஆகியவற்றில் இயங்கும் புதிய பேருந்துகள் மட்டும் அடுத்த ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி முதல் தில்லிக்குள் அனுமதிக்கப்படும்

DIN

சிஎன்ஜி, மின்சாரம் மற்றும் பிஎஸ் 6 டீசல் ஆகியவற்றில் இயங்கும் புதிய பேருந்துகள் மட்டும் அடுத்த ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி முதல் தில்லிக்குள் அனுமதிக்கப்படும் என்றும் இத்தகைய எரிபொருளில் இயங்காத பிற பேருந்துகள் தில்லிக்குள் அனுமதிக்கப்படாது காற்று தர மேலாண்மை ஆணையம் (சிஏக்யூஎம்) தெரிவித்துள்ளது.

தில்லி மற்றும் அதனையொட்டிய பகுதிகளை தூய்மையான இயக்கத்திற்கு மாறுவதை விரைவுபடுத்தும் நோக்கிலும், பழைய மற்றும் மாசுபடுத்தும் பேருந்துகள் தில்லிக்குள் நுழைவதைத் தடுக்கும் விதமாக புதிய வழிகாட்டுதல்களை காற்று தர மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2026 நவம்பர் 1-ஆம் தேதி முதல் சிஎன்ஜி, மின்சாரம் மற்றும் பிஎஸ் 6 டீசல் ஆகியவற்றில் இயங்கும் புதிய பேருந்துகள் மட்டும் தில்லிக்குள் அனுமதிக்கப்படும். இத்தகைய எரிபொருளில் இயங்காத பிற பேருந்துகள் வரும் 2026 ஜனவரி முதல் தில்லிக்குள் அனுமதிக்கப்படாது.

அனைத்து இந்திய அனுமதி, ஒப்பந்த வாகனம், கல்வி நிறுவனங்கள் மற்றும் பள்ளி அனுமதிகள் பெற்று, தில்லிக்குள் நுழையும் பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட அனைத்துப் பேருந்துகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.

தில்லியில் பதிவு செய்யப்பட்ட பேருந்துகளுக்கு இந்த உத்தரவிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் உள்ள மோட்டார் வாகன ஒருங்கிணைப்பாளர்கள், விநியோக சேவை வழங்குநர்கள் மற்றும் மின் வணிக நிறுவனங்கள், சிஎன்ஜி, மின்சார மூன்று சக்கர ஆட்டோ ரிக்‌ஷாக்களை தற்போதுள்ள ஒருங்கிணைப்பாளர்களின் தொகுப்பில் சேர்க்க வேண்டும்.

பழைய நான்கு சக்கர இலகுரக வணிக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் உள்பட வழக்கமான வாகனங்கள் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் அவற்றின் தற்போதைய வாகனக் குழுவில் சேர்க்கப்படாது.

தானியங்கி வாகன பதிவெண் அடையாளம் காணும் அமைப்பு மற்றும் ரேடியோ அலைவரிசை அடையாள முறைகள் (ஆர்எஃப்ஐடி) மூலம் எல்லைகளில் பேருந்துகளைக் கண்காணிக்குமாறு தில்லி போக்குவரத் துறை மற்றும் போக்குவரத்து காவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், புதிய விதியின் குறித்து தங்கள் மாநிலத்தில் உள்ள பேருந்து நிறுவனங்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்துமாறு மாநில அரசுகளுக்கு ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சங்கரன்கோவிலில் இன்று ஆடித்தவசுக் காட்சி

ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் தேவை - முதல்வரிடம் இடதுசாரிகள், விசிக மனு

இதுவரை பிளஸ் 1 வகுப்பில் சேராத மாணவா்களுக்கு இன்று கலந்தாய்வு

காமராஜா் சாலையில் திருநங்கைகள் மறியல்

இன்று 17 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

SCROLL FOR NEXT