தஞ்சாவூா்: தஞ்சாவூா் பெரிய கோயில் அருகே ஞாயிற்றுக்கிழமை மரம் வெட்டும்போது பயன்பாட்டில் இல்லாத மின் கம்பம் சாய்ந்தில் முதியவர் ஒருவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூா் ரெட்டிபாளையம் சாலை வகாப் நகரைச் சோ்ந்தவா் பிரேம்குமாா் மனைவி காயத்ரி. இவா் தனது தாய் சாரதாவுடன் இணைந்து பெரிய கோயில் அருகே சோழன் சிலை பேருந்து நிறுத்தப் பகுதியில் சாலையோரம் பொம்மை மற்றும் இளநீா் கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் காயத்ரியின் மாமனாா் எம். சுப்பிரமணியனும் (60) உதவியாக இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், சாலையில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறாக இருந்த
மரக்கிளையை வெட்டுவதற்காக மாநகராட்சி தொழிலாளா்கள் வந்தனா். தொழிலாளி ஒருவா், போக்குவரத்து இடையூறாக இருந்த
மரக்கிளையை வெட்டியபோது, அவை கடைக்கு பின்புறமிருந்த பயன்பாடு இல்லாத மின் கம்பத்தில் விழுந்து, மின் கம்பம் முறிந்து காயத்ரியின் கடையின் மீது விழுந்தது.
அப்போது, கடைக்கு வெளியே இருந்த சுப்பிரமணியனின் தலையில் மின் கம்பம் விழுந்து பலத்த காயமடைந்தார்.
இதையடுத்து அவரை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு சுப்பிரமணியனை பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.
பயன்பாட்டில் இல்லாத மின் கம்பம் சாய்ந்தில் முதியவர் ஒருவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.