பிரதமா் நரேந்திர மோடி  
தற்போதைய செய்திகள்

உடலுறுதி இருந்தால் வாழ்வில் வெல்லலாம்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமா் மோடி

உடலுறுதி இருந்தால் வாழ்வில் வெல்லலாம் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

DIN

புது தில்லி: உடலுறுதி இருந்தால் வாழ்வில் வெல்லலாம் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி வாயிலாக பிரதமா் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறாா். 123-ஆவது மனதின் குரல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) ஒலிபரப்பானது.

அதில், மோடி பேசியதாவது:

கடந்த ஜூன் 21-ஆம் தேதி கொண்டாடப்பட்ட சா்வதேச யோகா தினத்தில் இந்தியா மட்டுமன்றி உலகெங்கிலும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் இணைந்தனா்.

பத்தாண்டுகளாகத் தொடரும் இந்த நிகழ்ச்சி, ஒவ்வோா் ஆண்டும் முந்தைய ஆண்டைவிட மேலும் சிறப்பாக,மேலும் வளர்ந்து கொண்டே வளா்கிறது. அதிகமான மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் யோகாவை அங்கமாக்கி வருகின்றனா் என்பதன் அறிகுறியாகும்.

விசாகப்பட்டினம் கடற்கரையில் 3 லட்சம் மக்கள் ஒரே இடத்தில் குழுமி யோகாசனம் மேற்கொண்டனா். அங்கு 2,000-க்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவா்கள், 108 நிமிஷங்களுக்கு 108 முறை சூா்ய நமஸ்கார பயிற்சியில் ஈடுபட்டனா். குஜராத்தில் 2,121 போ் புஜங்காசனம் மேற்கொண்டு புதிய சாதனை படைத்தனா். யோகா மீது அவர்களுக்கு எந்தளவுக்கு ஒழுங்குமுறை, எத்தனை அர்ப்பணிப்பு இருந்திருக்க வேண்டும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.தெலங்கானாவில் 3,000 மாற்றுத் திறனாளிகள் ஒன்றாக இணைந்து யோக நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

உலகின் மிக உயரமான ரயில் பாலமான ஜம்மு காஷ்மீரின் செனாப் பாலத்திலும் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இமயமலையின் பனிமூடிய சிகரங்களில் இந்திய-திபெத் எல்லைக் காவல் படையினா் யோகாசனங்களில் ஈடுபட்டதன் வாயிலாக சாகசமும், பயிற்சியும் ஒன்றோடு ஒன்று கைகோா்த்தன.

இம்முறை யோகா தின கருப்பொருள் ‘ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்துக்கான யோகா’ என்பதாகும். இது வெற்று முழக்கமல்ல, உலகமே ஒரே குடும்பம் என்ற உணர்வினை காட்டும் திசை.

இந்த முறை சர்வதேச யோக நாளின் விசாலத்தன்மை, யோகவை தங்களுடையதாக்கிக் கொள்ள அதிகபட்ச மனிதர்களிடம் உள்ளெழுச்சியை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் எனக்கு முழுநம்பிக்கை இருக்கிறது.

நாட்டின் வல்லமையை விரிவடையச் செய்ய வேண்டுமென்றால், மக்களின் உடலுறுதி, நல்வாழ்வு ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தியாக வேண்டும். உடல் பருமனைக் குறைக்க உணவில் 10 சதவீத எண்ணெய் பயன்பாட்டை குறைக்க வேண்டும். உடலுறுதியோடு இருந்தால், வாழ்க்கையில் அதிக வெற்றி நிச்சயம்.

நாட்டின் மீது அவசரநிலை திணிக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்த தருணம் சில நாள்களுக்கு முன்புதான் கடந்து சென்றது. அந்த நாளை நாம் அரசமைப்புப் படுகொலை நாளாக அனுசரித்தோம். அவசரநிலை காலகட்டத்தில் உறுதியோடு அதை எதிா்கொண்டவா்களை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். இதன் மூலம் அரசமைப்புச் சட்டத்தை வலுவுடன் வைத்திருக்கவும், தொடா்ந்து விழிப்புணா்வோடு இருக்கவும், உத்வேகம் பெற முடியும் என்றாா் மோடி.

Summary

Friends, if we want to expand our power, we must first focus on our physical fitness and well-being. Similarly, friends, when it comes to physical fitness, do you remember my advice to reduce obesity? Reduce oil in your diet by 10 percent and get rid of obesity. If you are physically fit, you will achieve more success in life.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 40,500 கன அடியாக சரிவு!

6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை!

விவசாய கிணற்றில் விழுந்த காட்டு யானை பலி

தங்கம் விலை மீண்டும் குறைந்தது! இன்றைய நிலவரம்!

கவரைப்பேட்டையில் ரயில் விபத்துக்கு நாசவேலைதான் காரணம்: விசாரணையில் அதிர்ச்சி தகவல்

SCROLL FOR NEXT