சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய மாணவர் பிரவீன். 
தற்போதைய செய்திகள்

அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை!

அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதைப் பற்றி...

DIN

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் இந்திய மாணவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

தெலங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த ஜி பிரவீன் (வயது 26), ஹைதரபாத்தில் தனது இளநிலை படிப்பை முடித்த இவர், கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் தனது முதுநிலை படிப்பை பயின்று வந்தார்.

இந்நிலையில், நேற்று (மார்ச் 5) பிரவீனின் பெற்றோரை தொடர்புக்கொண்ட அந்நாட்டு அதிகாரிகள் பிரவீன் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதனால், அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்த அவரது பெற்றோர்கள் தெலங்கானா எம்எல்ஏக்கள் உள்ளிட்ட தலைவர்களிடன் உதவிக்கேட்டு அனுகியுள்ளனர்.

கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பரில் இந்தியாவுக்கு விடுமுறையில் வந்த பிரவீன் கடந்த ஜனவரியில்தான் திரும்ப சென்றுள்ளார். மேலும், நேற்று (மார்ச் 5) அதிகாலை பிரவீன் அவரது தந்தைக்கு செல்போன் மூலம் அழைத்திருந்ததாகவும், ஆனால் அவரது குடும்பத்தினர் தூங்கிக்கொண்டிருந்ததினால் அந்த அழைப்பை எடுக்க முடியவில்லை என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: பிரிட்டனில் அமைச்சர் ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் முயற்சி!

இதனைத் தொடர்ந்து, அவரது மரணம் குறித்த முழுமையான தகவல்கள் தெரிவிக்கப்படாத நிலையில், அங்குள்ள ஒரு கடையில் பிரவீனை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதாகவும் அவரது உடலில் துப்பாக்கிக் குண்டு காயங்கள் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், அவரது மரணத்திற்கான முழுமையான காரணம் உடற்கூராய்விற்கு பின்னரே தெரியவரும் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து, சிகாகோவிலுள்ள இந்தியத் தூதரகம் தங்களது இரங்கலைத் தெரிவித்ததுடன், அவரது குடும்பத்தினருடன் தொடர்பிலுள்ளதாகவும் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்ய தயாராகவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

முன்னதாக, அமெரிக்காவில் பயின்று வந்த தெலங்கானாவைச் சேர்ந்த 2 மாணவர்கள் கடந்த 2024 நவம்பர் மற்றும் 2025 ஜனவரியில் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மல்லிக காந்தா... ராஷி கண்ணா!

ஜாடையில் மயங்கி... ஐஸ்வர்யா மேனன்!

ஆசையில் தொடங்கி... ருக்மிணி வசந்த்!

வங்கதேசத்தை வீழ்த்துமா ஆப்கானிஸ்தான்? 155 ரன்கள் இலக்கு!

மலபார் ராகம்... ஆன் ஷீத்தல்!

SCROLL FOR NEXT