கோப்புப் படம் 
தற்போதைய செய்திகள்

உ.பி: சிறைவாசிகள் 5 பேருக்கு எச்ஐவி பாதிப்பு!

உத்தரப் பிரதேசத்தில் சிறைவாசிகள் 5 பேருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதைப் பற்றி...

DIN

உத்தரப் பிரதேசத்தின் மவூ சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள 5 பேருக்கு எச்.ஐ.வி. தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மவூவின் பிஜாரா பகுதியிலுள்ள மாவட்ட சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள சிறைவாசிகளுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அங்குள்ள சிறைவாசிகளில் 5 பேருக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அந்த சிறையின் அதிகாரி ராஜேஷ் குமார் இன்று (மார்ச்.8) தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அந்த சிறையின் மருத்துவர் ஒருவர் கூறுகையில், பல்லியாவில் நடைபெற்ற திருவிழாவின்போது பாதிக்கப்பட்ட சிறைவாசிகள் அனைவரும் தங்களது உடலில் பச்சைக் குத்திக்கொண்டதாகவும், ஒரே ஊசியை பயன்படுத்தியதால் இந்த தொற்று அவர்களுக்கு பரவியிருக்கக் கூடும் எனவும் கூறியுள்ளார்.

இதையும் படிக்க: பிரபல நடிகர் மீது விஷால் பட நடிகை பாலியல் குற்றச்சாட்டு: விசாரணைக்கு நீதிமன்றம் மறுப்பு!

இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறைவாசிகளுக்கு சிறப்பு உணவும் மருந்துகளும் வழங்கப்பட்டு வருகின்றது.

முன்னதாக, சுமார் 1,095 பேர் மவூ சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அதில் ஏற்கனவே 9 பேருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு கண்டறியப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புகையிலை இல்லா சமுதாயம் உருவாக்க உறுதிமொழி ஏற்பு

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் மழை!

வத்தலகுண்டு பகுதியில் நவ. 6-இல் மின் தடை

சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கிடையே கிரிக்கெட்: பதிவு செய்ய நவ.10 கடைசி

SCROLL FOR NEXT