சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட சூரிய ஒளி மின்சார வேலியினால் காட்டு யானை ஒன்று மின்சாரம் பாய்ந்து பலியாகியுள்ளது. 
தற்போதைய செய்திகள்

சட்டவிரோத சூரிய ஒளி மின்சார வேலியினால் காட்டு யானை பலி!

கர்நாடகத்தில் மின்சாரம் பாய்ந்து காட்டு யானை பலியானதைப் பற்றி...

DIN

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்திலுள்ள தனியார் தோட்டத்தில் காட்டு யானை ஒன்று மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளது.

அதிமங்கலா பகுதியிலுள்ள தனியார் எஸ்டேட் தோட்டத்தில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த சூரிய ஒளி மின்சார வேலியில் உரசியதில் 43 வயதுடைய ஆண் காட்டு யானை ஒன்று மின்சாரம் பாய்ந்து பலியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தகவலறிந்து சம்பவயிடத்துக்கு விரைந்த வனத்துறையினர் வனவிலங்கின் உயிர் பலியாக காரணமாக இருந்த தோட்ட கண்கானிப்பாளார் ஜான் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிக்க: ஜக்கி வாசுதேவ் மீதான அவதூறு விடியோவை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

மேலும், வனத்துறையின் கால்நடை மருத்துவர்கள் பலியான யானையின் உடலை உடற்கூராய்வு சோதனை செய்த பின்னர் அதன் சடலத்தை வனப்பகுதியினுள் புதைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அப்பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் இதனால் மக்கள் தோட்டங்களில் வேலை செய்ய அஞ்சுவதாகவும் அப்பகுதி மக்கள் புகாரளித்துள்ளனர். தற்போது வரை அங்குள்ள குடியிருப்புப் பகுதிகளில் காட்டு யானைகள் நுழைவதினால் ஏராளமான மனித உயிர்களும், மின்சாரம் பாய்ந்து 4 காட்டு யானைகளும் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மூட்டம் (சிறுகதைகள்)

சிவாஜியும் கண்ணதாசனும்

திரையெல்லாம் செண்பகப்பூ

கடியலூர் உருத்திரங்கண்ணனாரின் பட்டினப்பாலை (ஆய்வுரை)

பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்

SCROLL FOR NEXT