தற்போதைய செய்திகள்

அதிமுக தீர்மானத்துக்கு ஆதரவு ஏன்? - ஓபிஎஸ் விளக்கம்

பேரவைத் தலைவருக்கு எதிரான அதிமுகவின் தீர்மானத்துக்கு ஆதரவளித்தது ஏன் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் விளக்கம்.

DIN

பேரவைத் தலைவருக்கு எதிரான அதிமுகவின் தீர்மானத்துக்கு ஆதரவளித்தது ஏன் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களை அதிக நேரம் பேச அனுமதிப்பதில்லை, தொலைக்காட்சியில் நீண்ட நேரம் தங்களது பேச்சை நேரலை செய்தில்லை, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பேரவைத் தலைவரே பதிலளிக்கிறார் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை வைத்து சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் உதயக்குமார் இன்று கொண்டுவந்தார்.

இந்த தீர்மானம் விவாதத்துக்கு வந்த நிலையில், பேரவையைவிட்டு அப்பாவு வெளியேறினார். துணைத் தலைவர் பிச்சாண்டி அவைக்கு தலைமையேற்று வழிநடத்தினார்.

இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பேரவைத் தலைவர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றச்சாட்டை முன்வைத்தார்.

காங்கிரஸ், விசிக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பாஜக, பாமக உறுப்பினர்கள் பேரவைக் கூட்டத்தில் இன்று கலந்துகொள்ளவில்லை.

விவாதத்தின் இறுதியில் பேசிய முதல்வர், ”என் தலையீடோ, அமைச்சர்களின் தலையீடோ இல்லாமல் நடுநிலையோடு பேரவை வழிநடத்தி வருபவர் அப்பாவு” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் தீர்மானம் தோல்வியடைந்தது. தொடர்ந்து, எதிர்க்கட்சியின் கோரிக்கையை ஏற்று டிவிஷன் முறையிலும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதிலும், தீர்மானம் தோல்வி அடைந்ததாக பேரவைத் துணைத் தலைவர் பிச்சாண்டி அறிவித்தார்.

தீர்மானத்துக்கு ஆதரவாக 63 வாக்குகளும் எதிராக 154 வாக்குகளும் பதிவானது. இதையடுத்து, மீண்டும் பேரவைக்கு வந்த அப்பாவு, பேரவைத் தலைவர் இருக்கையில் அமர்ந்தார்.

இதனிடையே, அதிமுக கொண்டு வந்த தீர்மானத்துக்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர்.

பேரவையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, குறுக்கிட்டு அவருக்கு ஆதரவாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பேசினார்.

இதேபோல அதிமுகவின் தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தது ஏன்? என்பதற்குப் பதிலளித்த ஓபிஎஸ், அதிமுக உறுப்பினர் என்ற அடிப்படையில் கொறடா உத்தரவை மீறக்கூடாது என்பதற்காக பேரவைத் தலைவருக்கு எதிரான அதிமுகவின் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்ததாகக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வர் தலைமையில் அண்ணா நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி!

மருத்துவ இடங்களை அதிகரிக்க விண்ணப்பிக்க வாய்ப்பு: என்எம்சி

மருத்துவ மாணவிக்கு உயிா் காக்கும் உயா் நரம்பியல் சிகிச்சை: சாத்தியமாக்கிய அரசு மருத்துவா்கள்

‘இந்திராகாந்தி பெயரை பரிசீலினை செய்வதாக முதல்வா் வாக்குறுதி’

தன்னிறைவு பெற்ற முன்மாதிரி தொகுதியாக கொளத்தூரை மேம்படுத்தும் திட்டங்கள்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

SCROLL FOR NEXT