முகப்பு
தமிழ்நாடு

த.வெ.க.வில் இணைந்த முன்னாள் பேரவைத் தலைவர் மகன்!

தவெகவில் அதிமுக முன்னாள் பேரவைத் தலைவர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் சனிக்கிழமை இணைந்தார்.

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 9:25 PM
விஜய்யுடன் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன்.
பகிர்:
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 9:19 PM

தவெகவில் அதிமுக முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன், கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் சனிக்கிழமை இணைந்தார்.

அவர் அதிமுகவில் அவிநாசி தொகுதியின் ஐடி விங் பொறுப்பாளராக செயல்பட்டு வந்தார். மேலும் இவர் கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் நீலகிரி தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார்.

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 9:21 PM

இதேபோல் முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலையின் இளைய மகள் எழில் கேத்தரினும் இன்று தவெகவில் இணைந்தார்.

Advertisement

தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்ள பிரதான கட்சிகள் தயாராகி வரும் நிலையில் மற்றொரு புறம் அரசியல் பிரபலங்கள் பலர் கட்சி மாறியும் வருகின்றனர்.

summary

On Saturday, Lokesh Tamilchelvan, son of former AIADMK Legislative Assembly Speaker Dhanapal, joined the T. V. K. in the presence of the party leader Vijay.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.