சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்சல்களின் பதுங்குமிடங்களிலிருந்து வெடிகுண்டுகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
சுக்மாவின் தண்டேஷ்புரம் கிராமத்தின் மலைக்காடுகளில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் உள்ளதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் அடிப்படையில் மாவட்ட ரிசர்வ் காவல் படை மற்றும் மாவட்ட பாதுகாப்புப் படையினர் இணைந்து நேற்று (மார்ச் 18) மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க: இந்திய ரயில்கள் மீதான 7,971 கல்வீச்சு சம்பவங்களில் 4,549 பேர் கைது: மத்திய அரசு!
அப்போது, மாவோயிஸ்டுகளின் பதுங்குமிடத்திலிருந்து 55 ஜெலாட்டின் குச்சிகள், ஒரு பேரேல் கிரனேட் லாஞ்சர் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் அவர்களது முகாமுக்கு இன்று (மார்ச் 19) கொண்டு சென்றதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் கூறுகையில், பாதுகாப்புப் படையினரை தாக்கும் நோக்கத்துடன் இந்த ஆயுதங்களை நக்சல்கள் பதுக்கி வைத்திருந்தாகவும், தற்போது மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையினால் அந்த திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.