கல்லூரி மாணவர்களுக்கு ஒரு மடிக்கணினி ரூ. 20,000 என்ற மதிப்பில் தரமான மடிக்கணினி வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு பேரவையில் கூறியுள்ளார்.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 14 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்றைய அவை நிகழ்வில், திமுக அரசில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படவுள்ள மடிக்கணினியின் தரம் பற்றி அதிமுக எம்எல்ஏ தங்கமணியின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு,
"அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி அல்லது டேப் வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற கணக்கின்படி ஒரு மடிக்கணினியின் விலை ரூ. 10,000 என்று அதிமுகவினர் கூறுகின்றனர்.
இந்த நிதி ஓராண்டுக்குத்தான். அடுத்த ஆண்டும் ரூ. 2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். எனவே, சராசரியாக ஒரு மடிக்கணினியின் மதிப்பு ரூ. 20,000 என்ற அளவிலே இருக்கும். அதனால் மடிக்கணினியின் தரம் குறித்த கவலை நிச்சயமாக உங்களுக்குத் தேவையில்லை.
மாணவர்கள் விரும்பி அந்த மடிக்கணினியைப் பயன்படுத்தும் அளவிற்கு தரமான மடிக்கணினி வழங்கப்படும்.
சட்டப்பேரவை உறுப்பினர்களே பொறாமைப்படக்கூடிய வகையில் அனைத்து உள்ளடக்கங்களுடன் மாணவ, மாணவிகளுக்கு தரமான மடிக்கணினிகள் வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.