வருகிற மார்ச் 29 ஆம் தேதி(சனிக்கிழமை) அனைத்து நியாய விலைக் கடைகளும் வழக்கம்போல செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
"பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு எவ்வித பாதிப்புமின்றி, அத்தியாவசியப் பொருள்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
பொதுவாக மாதத்தின் கடைசிப் பணி நாளன்று ஒத்திசைவுப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்படுவதில்லை. இம்மாதத்தின் கடைசிப் பணி நாளான 29.03.2025 அன்று சனிக்கிழமையாக அமைகிறது.
மேலும், அதனைத் தொடர்ந்து வரும் 30.03.2025 அன்று தெலுங்கு வருடப்பிறப்பு, 31.03.2025 அன்று ரம்ஜான் பண்டிகையினை முன்னிட்டு அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் விடுமுறை நாட்களாகும்.
எனவே, இம்மாதத்தின் கடைசி இரண்டு நாள்கள் நியாய விலைக் கடைகளுக்குப் பொது விடுமுறை தினங்களாக வருவதால், அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களின் நலன் கருதி வருகின்ற 29.03.2025 அன்று அனைத்து நியாய விலைக் கடைகளும் செயல்பட்டு, வழக்கம்போல் அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் செய்யப்படும். குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கான அத்தியாவசியப் பொருள்களை 29.03.2025 அன்றும் நியாய விலைக் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | 'திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்' - சேகர்பாபு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.