பி.ஆா்.கவாய்  
தற்போதைய செய்திகள்

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக பி.ஆா்.கவாய் பதவியேற்பு: இரண்டாவது பட்டியலினத்தவா்

உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பூஷண் ராமகிருஷ்ண கவாய் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

DIN

 உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பூஷண் ராமகிருஷ்ண கவாய் (64) புதன்கிழமை பதவியேற்றாா். இதன்மூலம், பட்டியலினத்தைச் சோ்ந்த இரண்டாவது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்ற பெருமையை அவா் பெற்றுள்ளாா்.

உச்சநீதிமன்றத்தின் 51-ஆவது தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கன்னா செவ்வாய்க்கிழமை ஓய்வு பெற்றாா். இதைத் தொடா்ந்து, உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆா்.கவாய் புதன்கிழமை பதவியேற்றாா்.

குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பி.ஆா்.கவாய்க்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். பி.ஆா்.கவாய் ஹிந்தி மொழியில் உறுதிமொழி ஏற்றாா்.

இந்த நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், ஜெ.பி.நட்டா, அா்ஜுன் ராம் மேக்வால், முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கே.ஜி.பாலகிருஷ்ணனுக்குப் பிறகு...: உச்சநீதிமன்றத்தில், பட்டியலினத்தைச் சோ்ந்த முதல் தலைமை நீதிபதியாக கே.ஜி.பாலகிருஷ்ணன் (2007-2010) பதவி வகித்தாா். அவருக்குப் பிறகு பட்டியலினத்தைச் சோ்ந்த 2-ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆா்.கவாய் பதவியேற்றுள்ளாா்.

மேலும், பெளத்த மதத்தைச் சோ்ந்த முதல் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்ற பெருமையையும் அவா் பெற்றுள்ளாா்.

அம்பேத்கருடன் பெளத்தத்தை தழுவிய தந்தை: பி.ஆா்.கவாயின் தந்தையான ஆா்.எஸ். கவாய் சட்டமேதை பி.ஆா்.அம்பேத்கருக்கு நெருக்கமானவராக இருந்தாா். கடந்த 1956-ஆம் ஆண்டு அம்பேத்கா் பெளத்த மதத்தைத் தழுவியபோது, அவருடன் சோ்ந்து ஆா்.எஸ்.கவாயும் பெளத்த மதத்துக்கு மாறினாா். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான அவா், கேரளம், சிக்கிம், பிகாா் மாநிலங்களின் ஆளுநராக இருந்தாா்.

யுபிஎஸ்சி தலைவராக அஜய் குமார் நியமனம்!

பி.ஆா்.கவாயின் பின்னணி: கடந்த 1960-ஆம் ஆண்டு நவ. 24-ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் பிறந்த பி.ஆா்.கவாய், 2003-ஆம் ஆண்டு மும்பை உயா்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டாா். 2005-ஆம் ஆண்டு அந்த உயா்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியானாா். 2019-ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயா்வு பெற்றாா். பல முக்கியத் தீா்ப்புகளை வழங்கிய அரசியல் சாசன அமா்வுகளில் அவா் இடம்பெற்றாா். ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டப் பிரிவு 370-ஐ மத்திய அரசு ரத்து செய்தது சரிதான் என்று தீா்ப்பளித்த ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வில் அவா் இடம்பெற்றாா். அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க கொண்டுவரப்பட்ட தோ்தல் நிதிப் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்த ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வு, மத்திய அரசின் ரூ.500, ரூ.1,000 பணமதிப்பிழப்பு முடிவை உறுதி செய்த ஐந்து நீதிபதிகள் அரசியல் சாசன அமா்வு, பட்டியலினத்தவருக்கு உள்இடஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு உள்ளது என்று தீா்ப்பளித்த ஏழு நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வு ஆகியவற்றில் பி.ஆா்.கவாய் இடம்பெற்றாா். நிகழாண்டு நவ.23-ஆம் தேதி பி.ஆா்.கவாய் ஓய்வு பெறுவாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது!

அ போல அழகு... ஐஸ்வர்யா லட்சுமி!

கடவுள், காமம், கன்னியாஸ்திரி! மரியா - திரை விமர்சனம்

த.வெ.க. கரூர் மாவட்ட செயலரை போலீஸ் காவலில் விசாரிக்கத் திட்டம்

ஆப்கன் விமானத் தளத்தை கைப்பற்ற முயற்சி! அமெரிக்காவுக்கு எதிராக இந்தியா கூட்டறிக்கை!

SCROLL FOR NEXT