தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் 
தற்போதைய செய்திகள்

பாமக உள்கட்சி பிரச்னையில் யாரும் தலையிட முடியாது: நயினார் நாகேந்திரன்

பாமகவில் நடக்கும் பிரச்னை அவர்களது உள்கட்சி பிரச்னை என்றும் அதில் யாரும் தலையிட முடியாது, பாஜகவும் தலையிடாது என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

DIN

பாமகவில் நடக்கும் பிரச்னை அவர்களது உள்கட்சி பிரச்னை என்றும் அதில் யாரும் தலையிட முடியாது, பாஜகவும் தலையிடாது என நெல்லையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

நெல்லையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுடன் பேசுகையில்,

பாமகவில் நடக்கும் பிரச்னை அவர்களது உள்கட்சி பிரச்னை என்றும் அதில் யாரும் தலையிட முடியாது, பாஜகவும் தலையிடாது என தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்னை கவலை அளிப்பதாக உள்ளது. பல்வேறு இடங்களில் குடிநீர் பிரச்னை உள்ளது. அதனை சரி செய்ய மாநகராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்கததால் நெல்லை உள்பட பல மாவட்டங்களில் மஞ்சள் காமாலை நோய் பரவி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் 30 நாளுக்குள் குடிநீர் பிரச்னை தீர்க்கப்படும் என்று அமைச்சர் நேரு தெரிவித்திருந்த நிலையில், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், நடிகர் கமலஹாசன் தேவை இல்லாத கருத்துகளை தெரிவிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்க இருக்கும் அவர் சர்ச்சைக்குரிய பேச்சு, கருத்துகளை தெரிவிப்பதை நிறுத்திக் கொண்டு பொறுப்புள்ள கட்சித் தலைவராக நடந்து கொள்ள வேண்டும். கன்னடத்தை பூர்வீகமாகக் கொண்ட ஒருவரால் தனக்கு ஆபத்து ஏற்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ள கருத்து மிகவும் தவறானது என்றும் நயினார் நாகேந்திரன் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து: 60 பேர் பலி!

அரையிறுதிக்கு முன்னேறிய சின்னர்..! கடின தரை போட்டிகளில் புதிய சாதனை!

நாய் வளர்ப்போர் கவனத்துக்கு.! மைக்ரோ சிப் பொருத்தாவிட்டால் ரூ.3000 அபராதம்!

பறவை மோதல்: பெங்களூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ரத்து!

பிளாக்பஸ்டரான சூ ஃப்ரம் சோ ஓடிடி தேதி!

SCROLL FOR NEXT