சிதம்பரம்: சிதம்பரம் ககைசபை நகரில் வீட்டுக்குள் புகுந்து மூதாட்டியிடம் இருந்து தங்கச் சங்கிலி பறித்துச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சிதம்பரம் கனகசபை நகர் முதலாவது குறுக்கு தெருவில் வசிப்பவர் நடராஜன் மனைவி விஜயலட்சுமி (83). இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை ஆட்டோவில் வந்த மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து அருகாமையில் வீடு வாங்கிட்டேன் என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள் என கூறி அவரது கழுத்தில் தனது கவரிங் செயினை அணிவித்து ஆசீர்வாதம் பெறுவது போல் பெற்று மூதாட்டி கழுத்தில் இருந்த ஐந்து பவுன் தங்கச் சங்கிலியை சேர்த்து பறித்துக் கொண்டு தலைமறைவாகி விட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் நகர காவல் நிலைய ஆய்வாளர் சிவானந்தன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.