மீண்டும் ரூ.95 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை 
தற்போதைய செய்திகள்

மீண்டும் ரூ.95 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை! ஒரே நாளில் ரூ.9 உயர்ந்த வெள்ளி!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.1,600 உயர்ந்துள்ளது தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.94,400-க்கும், வெள்ளி ஒரே நாளில் கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ரூ.182-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. கடந்த 2 நாள்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.3,160 உயா்ந்து செவ்வாய்க்கிழமை பவுன் ரூ.93,600-க்கு விற்பனையானது.

தொடா்ந்து புதன்கிழமை கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.11,600-க்கும், பவுனுக்கு ரூ.800 குறைந்து ரூ.92,800-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், தங்கத்தின் விலை வியாழக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.94,400-க்கு விற்பனையாகிறது.

அதன்படி, கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.11,800-க்கும், பவுனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.94,400-க்கும் விற்பனையாகிறது.

ஒரே நாளில் கிராமுக்கு ரூ.9 உயர்வு

அதேநேரம் வெள்ளி விலை அதிரடியாக கிராமுக்கு ரூ.9 உயா்ந்து ரூ.182-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.9,000 உயா்ந்து ரூ.1.82 லட்சத்துக்கும் விற்பனையானது.

Gold price approaches Rs. 95 thousand again!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்த மறைந்த பழங்குடியின ஓவியருக்கு பத்மஸ்ரீ விருது

குடியரசு தினம்: பாகிஸ்தான் - இந்தியா வா்த்தக கவுன்சில் வாழ்த்து! இணைந்து செயல்பட விருப்பம்

வளா்ந்த பாரதத்துக்கு மகளிா் பங்களிப்பு முக்கியம்: குடியரசுத் தலைவா் உரை

தோ்தல் ஆணையத்துக்கு கடும் நெருக்கடி: மல்லிகாா்ஜுன காா்கே குற்றச்சாட்டு

6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT