அம்பாசமுத்திரம்: வடகிழக்குப் பருவமழை மிகத் தீவிரமடையவிருப்பதால் தென்மாவட்டங்களில் விரைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் தென்காசி வெதர்மேன் ராஜா அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
தெற்கு இலங்கை கடல் பகுதியில் நீடிக்கும் காற்று சுழற்சி வரும் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இதனால் தென் மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை மிகத் தீவிரமடைய சாதகமான சூழல் உருவாகியுள்ளது.
இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தெற்குக் கடலோர மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.
தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களும் மழைத் தொடரும். தூத்துக்குடி, காயல்பட்டினம், திருச்செந்தூர், மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து ஆகிய இடங்களில் அதீத கனமழைக்கும் வாய்ப்புள்ளது.
தென் மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை:
தற்போது பருவமழை மிக தீவிரமடைய இருப்பதால் தென் மாவட்டங்களில் தொடர் மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் பாபநாசம், மணிமுத்தாறு ஆகிய பிரதான அணைகளும் நிரம்ப வாய்ப்புள்ளதால் தாமிரவருணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் நிலை உள்ளது. எனவே தாமிரவருணி கரையோரப் பகுதியில் வாழும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்ட நிர்வாகங்கள் விரைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரிடர் மீட்புப் படைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
திருமூர்த்திமலை மேல் மலைபகுதியில் மழைப்பொழிவு உள்ளதால் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சனிக்கிழமை(நவ.22) பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பஞ்சலிங்க அருவிக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. அமணலிங்கேஸ்வரர் திருக்கோயில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் மற்றும் தரிசனம் நடைபெறுகிறது.
பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் திருக்கோயில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பஞ்சலிங்க அருவிக்கு செல்ல தடை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.