மேட்டூர் அணை நீர்மட்டம் சரியத் தொடங்கியது. 
தற்போதைய செய்திகள்

சரியத்தொடங்கியது மேட்டூர் அணை நீர்மட்டம்!

காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு எதிரொலியாக மேட்டூர் அணை நீர்மட்டம் மள மளவென சரியத் தொடங்கியது.

தினமணி செய்திச் சேவை

காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு எதிரொலியாக மேட்டூர் அணை நீர்மட்டம் மள மளவென சரியத் தொடங்கியது.

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டது.

கர்நாடக அணைகளில் உபரி நீர் வரத்து காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து நடப்பு ஆண்டில் 6 ஆவது முறையாக செப்டம்பர் 2 ஆம் தேதி மேட்டூர் அணை நிரம்பியது.

தற்போது காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை தணிந்த காரணத்தால் கர்நாடகா அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு குறைக்கப்பட்டது.

காவிரி டெல்டா பாசன பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் பாசன தேவை அதிகரித்தது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.

கடந்த 24 ஆம் தேதி பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 6,000 கனஅடியிலிருந்து வினாடிக்கு 9,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. படிப்படியாக அதிகரிக்கப்பட்ட நீர் திறப்பு புதன்கிழமை வினாடிக்கு 18,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. நீர் வரத்து வினாடிக்கு 5,312 கனஅடியாக சரிந்த நிலையில் காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு வினாடிக்கு 18,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மள மளவென சரிந்து வருகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் கடந்த 26 ஆம் தேதி நிரம்பிய நிலையில் 119.02 அடியாக இருந்து வந்த மேட்டூர் அணை நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 116. 29 அடியாகச் சரிந்துள்ளது. கடந்த ஐந்து நாட்களில் அணையின் நீர்மட்டம் 2.73 அடி சரித்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 116.29 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 5312 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து காவேரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 18,000 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 87.67 டிஎம்சியாக உள்ளது.

Mettur Dam water level has started to reducede!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிக் பாஸ் - 9 தொடக்கம்: தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

தசரா ஸ்பெஷல்.... நிகிதா சர்மா!

ஆலங்கிளியே... ஜெனிலியா!

தனிநபரைக் குறிவைக்கும் ஃபிஷிங் தாக்குதல்: எப்படித் தற்காத்துக்கொள்வது?

செளடேஸ்வரி அம்மன் கோயிலில் கத்தி போடும் திருவிழா: ஏராளமானோர் பங்கேற்பு!

SCROLL FOR NEXT