ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் ரூ. 737.88 கோடி செலவிலான 109 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.  
தற்போதைய செய்திகள்

ராமநாதபுரத்தில் முதல்வர் திறந்து வைத்த, அடிக்கல் நாட்டப்பட்ட திட்டப்பணிகள் முழுவிவரம்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் ரூ. 737.88 கோடி செலவிலான 109 முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இணையதளச் செய்திப் பிரிவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் ரூ. 737.88 கோடி செலவிலான 109 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், 150 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 50,752 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (அக்.3) ராமநாதபுரம் அருகே பேராவூா் பகுதியில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ. 176 கோடியே 59 லட்சம் செலவிலான 109 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, ரூ.134 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 150 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் 50,752 பயனாளிகளுக்கு ரூ.426 கோடியே 83 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற திட்டப்பணிகளின் விவரங்கள்:

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், ராமேசுவரம், பரமக்குடி, கிளியூர், ஆனந்தூர், கீழதூவல், முதுகுளத்தூர் வடக்கு, முதுகுளத்தூர் தெற்கு, மேலக்கொடுமலூர், நயினார்கோவில், சாயல்குடி ஆகிய இடங்களில் ரூ. 2 கோடியே 37 லட்சத்து 6 ஆயிரம் செலவில் வருவாய் ஆய்வாளர் குடியிருப்புகள் மற்றும் எஸ்.அண்டக்குடி ஊராட்சியில் கிராம நிருவாக அலுவலர் குடியிருப்பு,

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், நயினார்கோவில், கோவிலாங்குளம், பரமக்குடி ஆகிய இடங்களில் ரூ.10 கோடியே 19 லட்சத்து 50 ஆயிரம் செலவில் சமூக நீதி விடுதிகள்,

பள்ளிக் கல்வித் துறை சார்பில், ரூ. 9 கோடியே 92 லட்சத்து 44 ஆயிரம் செலவில் நபார்டு திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ், தங்கச்சிமடம், எஸ்.கொடிக்குளம், நம்புதாளை, பெருங்குளம், தொருவளூர், கடலாடி ஆகிய அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் தொண்டி, ஏர்வாடி ஆகிய இடங்களில் கிளை நூலகங்கள்,

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், வேதாளை, செம்படையார்குளம், எல்.கருங்குளம், இருவேலி ஆகிய இடங்களில் ரூ.1 கோடியே 35 லட்சம் செலவில் ஆரம்ப சுகாதார நிலையம்,

துணை சுகாதார நிலையங்கள், தோட்டக்கலைத் துறை சார்பில், உச்சிப்புளி அரசு தென்னை நாற்றுப் பண்ணையில் ரூ.10 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட அரசு தென்னை நாற்றங்கால் பண்ணை மேம்படுத்தும் பணி,

நீர்வளத் துறை சார்பில், பரமக்குடி வட்டம், பி.கொடிக்குளம் ஊராட்சியில் உபரிநீர் கால்வாய் குறுக்கே பகிரணை அமைத்து ரூ. 4 கோடியே 19 லட்சம் செலவில் அகரம் கண்மாய்க்கு புதிய பாசன கால்வாய்,

நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் , ரூ. 39 கோடியே 22 லட்சம் செலவில் ராமநாதபுரத்தில் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் திட்டத்தின் கீழ் புதிய பேருந்து நிலையம்,

ராமேசுவரம் மற்றும் பரமக்குடியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வாரச் சந்தைகள் மற்றும் அறிவுசார் மையங்கள், ரூ. 96 லட்சம் ரூபாய் செலவில் மண்டபம்,

பேரூராட்சியில் எருமை தரவை ஊரணி, முதுகுளத்தூர், கமுதி, அபிராமம் ஆகிய பேரூராட்சிகளில் பூங்காக்கள், கூட்டுறவுத் துறை சார்பில், செல்வநாயகபுரம் மற்றும் வெங்கிட்டான்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களை ரூ. 61 லட்சத்து 36 ஆயிரம் செலவில் மேம்படுத்தப்பட்ட பல்நோக்கு சேவை மையங்கள்,

ஆதிராவிடர் நலத் துறை சார்பில், பழஞ்சிறை மற்றும் காட்டுபரமக்குடி அரசு ஆதிதிராவிட நல உயர்நிலைப் பள்ளிகளில் ரூ.1 கோடியே 51 லட்சம் செலவில் வகுப்பறைக் கட்டடங்கள், கழிவறைகள், ஆழ்துளைக் கிணறு,

நெடுஞ்சாலைத் துறை சார்பில், பார்த்திபனூர் – கமுதி சாலை முதல் பெரிய பிச்சைப்பனேந்தல் சாலை, முதலூர் சாலை, திருவில்லிபுத்தூர் – சிவகாசி – விருதுநகர் –அருப்புக்கோட்டை – திருச்சுழி – நரிக்குடி - பார்த்திபனூர் சாலை, தேவிப்பட்டினம் -நயினார்கோவில் பொட்டவயல் சாலை, முதுகுளத்தூர் - வீரசோழன் சாலை ஆகிய இடங்களில் ரூ. 36 கோடியே 83 லட்சத்து 9 ஆயிரம் செலவில் உயர்மட்டப் பாலங்கள், முதுகுளத்தூர் – கமுதி சாலை, பார்த்திபனூர் – கமுதி – அருப்புக்கோட்டை சாலை வரையில் ரூ.56 கோடியே 65 லட்சம் செலவில் புதிய சாலைகள்,

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பில், கஞ்சியேந்தல், வாழவந்தாள்புரம், வலங்காபுரி, வெங்கடேஷ்வரா காலனி, கூரியூர் ஆகிய இடங்களில் அங்கன்வாடி மையங்கள், வண்ணாண்குண்டு மற்றும் நைனாமரைக்கான் ஆகிய இடங்களில் நியாய விலைக் கடைகள்,

வெள்ளாமரிச்சிக்கட்டி, லாந்தை, தலைத்தோப்பு, தெற்குத் தரவை, மருங்கூர், வலசை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உணவு தானிய சேமிப்புக் கிடங்குகள் மற்றும் பல்வேறு பணிகள் என ரூ. 12 கோடியே 67 லட்சத்து 87 ஆயிரம் செலவில் 54 முடிவுற்றப் பணிகள் என மொத்தம் ரூ. 176 கோடியே 59 லட்சத்து 32 ஆயிரம் செலவிலான 109 முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட பணிகளின் விவரங்கள்

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், கடலாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ. 8 கோடியே 47 லட்சம் மதிப்பீட்டில் மாணவியர்களுக்கு சமூக நீதி விடுதிக் கட்டடம்,

பள்ளிக் கல்வித் துறை சார்பில், ராமநாதபுரம், மண்டபம், கடலாடி, திருப்புல்லானி, முதுகுளத்தூர், ஆர்.எஸ்.மங்கலம், கமுதி நயினார்கோவில், திருவாடானை, பரமக்குடி, போகலூர் ஆகிய இடங்களில் உள்ள தொடக்கப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.42 கோடியே 86 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் கழிப்பறைக் கட்டடங்கள்,

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ரூ. 7 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் தொண்டி பேரூராட்சியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார பொது சுகாதார அலகு மற்றும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதய உள்ளீடுருவி கதிரியக்க ஆய்வகக் கட்டடம்,

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில், திருவாடானையில் ரூ. 2 கோடியே 31 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில் வட்ட செயல்முறை கிடங்கு கூடுதல் கட்டடம்,

வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில், வெளிப்பட்டிணத்தில் ரூ.11 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் மாவட்ட துணை பதிவுத்துறை அலுவலகம் மற்றும் சார்பதிவாளர் அலுவலகக் கட்டடம்,

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், மங்களக்குடி மற்றும் பெருநாழி ஆகிய இடங்களில் ரூ. 70 லட்சம் மதிப்பீட்டில் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புகள்,

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில், முதுகுளத்தூர் மற்றும் இராமநாதபுரம் ஆகிய இடங்களில் ரூ. 3 கோடியே 65 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பீட்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் புனரமைக்கும் பணிகள்,

கமுதியில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.11 கோடி மதிப்பீட்டில் வகுப்பறை மற்றும் பணிமனை அமைக்கும் பணிகள்,

கூட்டுறவுத் துறை சார்பில், பாண்டிக்கண்மாய், சாம்பக்குளம், காமன்கோட்டை, அரியனேந்தல் ஆகிய இடங்களில் ரூ.1 கோடியே 29 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டடங்கள்,

நீர்வளத் துறை சார்பில் ரூ. 36 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் சருகனி ஆற்றின் குறுக்கே புதிய அணை, போகலூர் மற்றும் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தில் களரி கண்மாய் மற்றும் வரத்து கால்வாய் புனரமைப்பு, ராமநாதபுரம் பெரிய கண்மாய் சிதிலமடைந்த கட்டுமானங்களை சீரமைக்கும் பணிகள், பார்த்திபனூர் மதகணை வலது பிரதான கால்வாய் நெடுகையில் தலைமதகு மற்றும் சட்டர்களை மறுசீரமைக்கும் பணிகள்,

வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில், பரமக்குடியில் ரூ.1 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் மண் பரிசோதனை நிலையம் மற்றும் நடமாடும் மண் பரிசோதனை நிலையம்,

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், ரூ.7 கோடியே 23 லட்சத்து 39 ஆயிரம் மதிப்பீட்டில் தங்கச்சிமடம், தாமரைக்குளம், கும்பரம், பட்டிணம்காத்தான் தொடக்கப்பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், பூசேரி ஊராட்சியில் நியாயவிலைக் கட்டடம், நெடியமாணிக்கம் ஊராட்சியில் அங்கன்வாடி மையக் கட்டடம் என மொத்தம் ரூ.134 கோடியே 45 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பீட்டிலான 150 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

Tamil Nadu Chief Minister MK Stalin on Friday inaugurated various development projects worth Rs. 737.88 crore in Ramanathapuram district and provided government welfare assistance worth Rs. 4268 crore to 50752 beneficiaries.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேகமோ அவள்... பிரியங்கா மோகன்!

பங்குச் சந்தைகள் இரண்டாவது நாளாக உயர்வுடன் நிறைவு!

ரீல்ஸ் மோகம்: தண்டவாளத்தில் நின்றபடி விடியோ எடுத்த சிறார்கள் வந்தே பாரத் ரயில் மோதி பலி!

விஜய் மீது வழக்குப் பதிவு செய்யாதது வருத்தமளிக்கிறது! - சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி

முதல் டெஸ்ட்: மூவர் சதம் விளாசல்; இந்தியா 286 ரன்கள் முன்னிலை!

SCROLL FOR NEXT