வேளாண் இளநிலைப் படிப்புகளில் 20% ஐசிஏஆர் தேர்வு மூலம் நிரப்பப்படும்: சிவராஜ் சிங் சௌகான்
நாடு முழுவதும் உள்ள வேளாண் கல்லூரி மற்றும் வேளாண் பல்கலைக்கழகங்களில் உள்ள இளநிலைப் படிப்புகளுக்கான இடங்களில் 20 சதவீதம் அகில இந்திய போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்படும்
நாடு முழுவதும் உள்ள வேளாண் கல்லூரி மற்றும் வேளாண் பல்கலைக்கழகங்களில் உள்ள இளநிலைப் படிப்புகளுக்கான இடங்களில் 20 சதவீதத்தை அகில இந்திய போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்படும் என மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் சனிக்கிழமை அறிவித்துள்ளார்.
ஒரு நாடு, ஒரு விவசாயம், ஒரு குழு என்ற கொள்கையின்படி இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் இந்தத் தேர்வை நடத்தும் என்று வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை 12 ஆம் வகுப்பில் உயிரியல், வேதியியல், இயற்பியல், கணிதம் அல்லது வேளாண்மை படித்த மாணவர்கள் ‘க்யூட்-ஐசிஏஆர்’சிய நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
Advertisement
Advertisement
இது குறித்து செய்தியாளர்களுடன் பேசிய சிவராஜ் சிங் சௌகான், வேளாண் கல்லூரி மற்றும் வேளாண் பல்கலைக்கழகங்களில் உள்ள இளநிலைப் படிப்புகளுக்கான இடங்களில் 20 சதவீதத்தை அகில இந்திய போட்டித் தேர்வின் அடிப்படையிலேயே நிரப்பப்படும். இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு சேர்க்கை எளிமைப்படுத்தப்படுவதாக கூறினார்.
இது 2025-26 கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்படும் என்றும், இது பி.எஸ்சி. வேளாண்மையில் சேருவதில் உள்ள சேர்க்கை தொடர்பான சிக்கல்களையும் நீக்கும். இதன் மூலம் சுமார் மூவாயிரம் மாணவர்கள் நேரடியாக பயனடைவார்கள் என்று சௌகான் கூறினார்.
In a major relief in agricultural education, Union Minister for Agriculture and Farmers’ Welfare Shivraj Singh Chouhan has announced to fill 20 percent of undergraduate seats in agricultural universities through an all-India competitive examination.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.