மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு குறைப்பு!
மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 45,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 45,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சனிக்கிழமை பிற்பகல் பகல் 12 மணிக்கு வினாடிக்கு 45,500 கன அடியாக சரிந்தது. இதனையடுத்து மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 65,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 45,000 கன அடியாக குறைக்கப்பட்டது.
120 அடியாக நீடிக்கும் நீர்மட்டம்
மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து ஆறாவது நாளாக 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 45,500 கன அடியாக சரிந்தது. அணையில் இருந்து நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22,500 கன அடி நீரும், உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 22, 500 கன அடி நீரும், மேல்மட்ட மதங்கள் வழியாக கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.