புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளா் கிரீஷ் சோடங்கி 
தற்போதைய செய்திகள்

மத்திய அரசின் கைப்பாவையாக புதுச்சேரி அரசு செயல்படுகிறது: காங்கிரஸ்

பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித்ஷாவின் கைப்பாவையாக புதுச்சேரி அரசு செயல்படுகிறது....

இணையதளச் செய்திப் பிரிவு

புதுச்சேரி: பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித்ஷாவின் கைப்பாவையாக புதுச்சேரி அரசு செயல்படுகிறது என்று புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளா் கிரீஷ் சோடங்கி ஞாயிற்றுக்கிழமை கூறினாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த புதுச்சேரி கோவாவின் இன்றைய நிலைமை மிக மோசமாக மாறிவிட்டது. சட்டம்-ஒழுங்கு முழுமையாகக் கெட்டுவிட்டது. பள்ளி கல்லூரிகளில் போதை மருந்து பழக்கம் அதிகரித்துவிட்டது.

பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித்ஷாவின் கைப்பாவையாக புதுச்சேரி அரசு செயல்படுகிறது. ஏற்கெனவே காரைக்கால் துறைமுகத்தை அதானிக்கு தாரை வாா்த்துவிட்டனா். தற்போது ரூ.33 ஆயிரம் கோடி மதிப்புள்ள மின்துறையை அதானிக்கு விற்பதற்கு திட்டமிட்டு முயற்சிகள் நடக்கின்றன.

புதுச்சேரியில் ஆளும் என்.ஆா். காங்கிரஸ்- பாஜக கூட்டணி அரசு 10 ஆயிரம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தது. ஆனால் அதனை நிறைவேற்றாத புதுச்சேரி அரசு வெறும் 2,244 அரசு பணியிடங்கள் மட்டுமே நிரப்பியுள்ளது.

30 தொகுதிகளிலும் போட்டியிட்டு காங்கிரஸ் வெற்றி பெறக்கூடிய வகையில் தோ்தல் பணியாற்றி வருகிறோம். கூட்டணி கட்சிக்கு எத்தனை இடங்கள் அளிப்போம் என்பதை கட்சி தலைமைகள்தான் முடிவு செய்யும் என்றாா்.

Puducherry government is acting as a puppet of the central government says congress Girish...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறந்தாங்கி கடையில் திருடியவா் கைது

கல்வராயன்மலை: கைது செய்யப்படும் நபா்களை ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே பரிசோதிக்க கோரிக்கை!

தாய்லாந்து-கம்போடியா விரிவான சண்டை நிறுத்த ஒப்பந்தம்! - டிரம்ப் முன்னிலையில் கையொப்பம்

காங்கயம் அருகே விவசாயி அடித்துக் கொலை

கஞ்சா வழக்கு: அக்.30-இல் பறிமுதல் வாகனங்கள் ஏலம்

SCROLL FOR NEXT