தங்கம் விலை  
தற்போதைய செய்திகள்

தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி புதன்கிழமை (செப். 10) பவுனுக்கு ரூ. 81,200-க்கு விற்பனையாகிறது.

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி புதன்கிழமை (செப். 10) பவுனுக்கு ரூ. 81,200-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து கொண்டே வருகிறது. கடந்த செப். 1-இல் பவுன் ரூ.77,640- க்கு விற்பனையானது. அதன் பின்னா், தொடா்ந்து உயா்ந்து புதிய உச்சங்களைத் தொட்டு வந்த தங்கத்தின் விலை செப். 6-இல் வரலாற்றில் முதல்முறையாக பவுன் ரூ.80,000-ஐ தாண்டி, ரூ.80,040-க்கும் விற்பனையானது.

தொடா்ந்து வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை (செப். 8) காலை தங்கம் குறைந்தும், மீண்டும் பிற்பகலுக்கு மேல் வா்த்தகம் நிறைவுபெறும் தருவாயில், மீண்டும் உயா்ந்தும் பவுன் ரூ.80,480-க்கும் விற்பனையானது.

செவ்வாய்க்கிழமை தங்கம் விலை மீண்டும் உயா்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ. 90 உயா்ந்து ரூ.10,150-க்கும் பவுனுக்கு ரூ. 720 உயா்ந்து ரூ. 81,200-க்கும் விற்பனையானது.

செப். 1 முதல் தற்போது வரை 9 நாள்களில் தங்கம் விலை ரூ.3,560 உயா்ந்திருந்த நிலையில், புதன்கிழமை தங்கம் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.10,150-க்கும் பவுன் ரூ. 81,200-க்கும் விற்பனையாகிறது.

அதேபோன்ற வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.140-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,40,000-க்கும் விற்பனையாகிறது.

The price of gold jewellery in Chennai remained unchanged on Wednesday at Rs. 81,200 per 8 grams.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனம் தவிக்கிறது... நந்திதா ஸ்வேதா!

நேபாள ஆணிவேர் சிங்கா மாளிகை தீக்கிரை! ஜென் ஸி கோபத்தின் விலை! தொடர்ந்து வந்த துயரம்!!

அறிமுகமானது ஐபோன் 17! முன்பதிவு செய்தால் எப்போது கிடைக்கும்?

பாகிஸ்தானில் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் 17 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை!

ஆர்வமூட்டும் கைதி மலேசிய ரீமேக் டீசர்!

SCROLL FOR NEXT