முகப்பு
தற்போதைய செய்திகள்

மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!

மேற்கு வங்கத்தில் இரண்டாவது மற்றும் இறுதிக்கட்ட பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு புதன்கிழமை (ஏப்.29) 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருவது குறித்து...

Updated On : 29 ஏப்ரல், 2026 at 8:13 AM
மேற்கு வங்கத்தில் இரண்டாவது மற்றும் இறுதிக்கட்ட பேரவைத் தோ்தலில் காத்திருக்கும் வாக்காளர்கள். - ட்விட்டர்
பகிர்:

மேற்கு வங்கத்தில் இரண்டாவது மற்றும் இறுதிக்கட்ட பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு புதன்கிழமை காலை (ஏப்.29) 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.

294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு கடந்த ஏப்.23-இல் தோ்தல் நடைபெற்றது. இதில் முன்னெப்போதும் இல்லாத அளவில் 93.19 சதவீத வாக்குகள் பதிவாகின. ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன.

இந்த நிலையில், இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டமாக 142 தொகுதிகளுக்கு புதன்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

Advertisement

இதற்காக 41,001 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த தோ்தலில் தங்களது ஜனநாயகக் கடைமையை ஆற்றவுள்ள 1.64 கோடி ஆண்கள், 1.57 கோடி பெண்கள், 792 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 3.21 கோடி போ் 1,448 வேட்பாளர்களின் அரசியல் விதியை தீர்மானிக்க உள்ளனர். களத்தில் உள்ளவர்களில் 1,228 பேர் ஆண்கள், 220 பேர் பெண்கள்.

வாக்குப்பதிவு அமைதியாகவும் சுமுகமாகவும் நடைபெறுவதற்காக 2,321 கம்பெனி மத்தியப் படைகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

summary

Voting began on Wednesday in 142 constituencies in the second and final phase of the West Bengal assembly elections...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.