லைஃப்ஸ்டைல்

இளமையில் முதுமையா? புகைப் பழக்கம் இருக்கிறதா? அப்படியென்றால்...

மனித உயிரின் ஆட்கொல்லி என்று தெரிந்தும் புகைப்பழக்கத்தை யாரும் விடுவதாக இல்லை. மாறாக, இளம் பருவத்தினரிடமும் இந்த புகைப்பழக்கமானது அதிகரித்துக்கொண்டு தான் இருக்கிறது. 

Muthumari

'சைலன்ட் கில்லர்' எனப்படும் புகைப்பழக்கத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் உலகம் முழுவதுமே அதிகரித்து வருகின்றன. இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 5 லட்சம் பேர் புகைப்பழக்கத்தினால் உயிரிழப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

'மனித உயிரின் ஆட்கொல்லி' என்று தெரிந்தும் புகைப்பழக்கத்தை யாரும் விடுவதாக இல்லை. மாறாக, இளம் பருவத்தினரிடமும் இந்த புகைப்பழக்கமானது அதிகரித்துக்கொண்டு இருப்பது கவலைக்குரிய விஷயமே. 

புகைப்பிடிப்பவருக்கு நுரையீரல் கோளாறு, சுவாசப் பிரச்னைகள், தோல் நோய்கள், இறுதியாக புற்றுநோய் வரை தாக்கும் அபாயம் இருக்கிறது. புகைப்பிடிப்பவருக்கு மட்டுமின்றி புகைபிடிப்பவரின் அருகில் உள்ளவர்களும் அந்த புகையை சுவாசிக்கும்போது அவர்களுக்கும் இந்த பிரச்னைகளுக்கு உள்ளாகிறார்கள். 

பொது இடத்தில் புகைப்பிடிப்பதை தடை செய்ய சட்டம் கொண்டு வரப்பட்டும் அது முழுமையாக அமலுக்கு வராததால் பொது இடங்களில் மற்றவரின் முகத்திற்கு நேராக புகைபிடிப்பதை சிலர் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். 

இந்த புகைப்பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பல்வேறு ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் லூயிஸ் மில்லார்ட் மற்றும் அவருடன் பணிபுரிபவர்கள் இணைந்து ஒரு ஆய்வு மேற்கொண்டுள்ளனர். ஆய்வின் முடிவில், அதிகம் புகைப்பிடிப்பதால் இளமையிலே வயது முதிர்வு ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது. 

அதிகமான புகைப்பழக்கத்தின் விளைவாக நமது உடலில் உள்ள மரபணு செல்களில் மாற்றம் ஏற்படுகிறது. இதன் காரணமாக இளமையிலே சருமம் முதிர்ச்சியடைய ஆரம்பித்து விடுகிறது. புகையிலை பயன்பாட்டின் மூலம் மரபணு மாறுபாட்டின் விளைவுகளை பிரித்து ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். . 

இங்கிலாந்து பயோபாங்கில் உள்ள ஆண்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். புகை பிடிப்பவர்களின் மரபணுக்களும், புகைப்பழக்கம் இல்லாதவர்களின் மரபணுக்களும் ஒப்பிடப்பட்டு தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டுள்ளன.

மரபணுவில் 18,000 பண்புகள் மாறும் வரிசைப்படுத்தியிருந்த நிலையில், வயது முதிர்வுக்கான மரபணுவிலும் மாற்றம் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இதுதவிர மோசமான நுரையீரல் செயல்பாடு, நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய், தோல் புற்றுநோய் ஆகிய விளைவுகளும் கண்டறியப்பட்டுள்ளன. 

நுரையீரல், சுவாச பிரச்னைகள் மட்டுமில்லாது இளம் வயதில் புகைப் பிடிப்பவர்களுக்கு சருமத்தில் வயது முதிர்வு ஏற்படுவதை இவர்கள் கண்டறிந்துள்ளனர். 

எனவே, இளமையுடன் இருக்க வேண்டும் என்றால் புகைப்பழக்கத்தை விட்டொழியுங்கள் .. ஆரோக்கியமான வாழ்க்கையை வாழுங்கள்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமரின் தமிழக வருகை எழுச்சியைத் தரும்: வானதி சீனிவாசன்

அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேரும்: எடப்பாடி பழனிசாமி

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ. 8.25 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

தஞ்சாவூா் மாவட்டத்தில் பரவலாக மழை

SCROLL FOR NEXT