அழகே அழகு

சர்வதேச சூப்பர் மாடல் பெண்ணுக்கு நம்மூர் 6 கஜப்புடவையின் மீது தான் கொள்ளைப் பிரியமாம்!

நவோமிக்கு இந்தியா என்றாலும் இந்திய உடைகள் என்றாலும் கூட கொள்ளைப் பிரியம்.

ஹரிணி வாசுதேவ்

யார் அவர்?

ஃபேஷன் உலகில் நவோமி கேம்பெல்லைத் தெரியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை. உலகின் டாப் 10 சூப்பர் மாடல்களில் ஒருவர் நவோமி. கறுப்பினப் பெண்ணான நவோமி மாடலிங் உலகில் ஜொலித்தது வெறும் அதிர்ஷடத்தின் துணையால் மட்டும் அல்ல அந்த இடத்தை அடைய அவர் கடுமையாக மெனக்கெட்டிருக்கிறார். அதற்காக அவர் பிற மாடல்களைப் போல உடலை வருத்திக் கொண்டு உணவுக் கட்டுப்பாடு, சதா சர்வகாலமும் ஜிம்மில் வொர்கவுட், நோ ஸ்மோக்கிங், நோ ஆல்கஹால் என்றெல்லாம் தன்னை வருத்திக் கொள்ளவில்லையாம். அதே சமயம் துக்கம் மேலிட்டால் நிச்சயம் வாய் விட்டு அழுது விடுவதிலும், பார்ட்னருடனான சண்டையின் போது மனதிலிருப்பதை தடித்த வார்த்தைகள் மூலம் கொட்டி விடுவதன் மூலமும் தன்னை ரிலாக்ஸ் செய்து கொள்ளவும் தயங்கியதில்லையாம் நவோமி. அவரது ஸ்ட்ரெஸ் தீர இது தான் மிகச்சிறந்த நிவாரணம் என்கிறார் அவர். எப்படியோ இந்த கறுப்பழகி தன் மனதை கவலைகள் இன்றி நிம்மதியாக வைத்துக் கொண்டால் சரி அவ்வளவு தானே! 

நவோமிக்கு இந்தியா என்றாலும் இந்திய உடைகள் என்றாலும் கூட கொள்ளைப் பிரியம். எத்தனை வேலைப்பளு என்றாலும் கூட சமயம் வாய்த்தால் இந்தியா வரத் தயங்குவதில்லை நவோமி. இந்தியா வருவதோடு மட்டுமல்ல, நம்மூர் 6 கஜப்புடவை, லெஹங்கா, டிசைனர் ஆர்ட் புடவைகள் என எதையும் ஒரு கை பார்த்து விடுவதும் வழக்கம். இதற்கு அவருக்கு உதவுபவர் மனிஷ் மல்ஹோத்ரா.

இந்தியாவின் செலிபிரிட்டி ஆடை வடிவமைப்பாளரான மனீஷ் மல்ஹோத்திரா நவோமியின் நண்பர் மட்டுமல்ல, நவோமி இந்தியா வருகையில் அவருக்கேற்ற வகையில் இந்தியப் புடவைகளையும் மற்ற பிற உடைகளையும் வடிவமைத்துக் கொடுப்பதும் அவரே தான்!

சமீபத்தில் இந்தியா வந்த நவோமி மேற்கண்ட புகைப்படத்தில் அணிந்திருக்கும் சிவப்பு நிற லெஹங்கா மனீஷ் மல்ஹோத்திராவின் கோச்சர் நிறுவனத்தின் தயாரிப்பு தான். 

நவோமி இந்தியா வரும் ஒவ்வொரு முறையில் மனீஷின் கோச்சரில் அவருக்குத் தேவையான புதுப் புது புடவைகள் டிசைன் செய்யப்பட்டு தயார்நிலையில் இருக்கும்.

இந்தப் புகைப்படத்தில் நவோமியின் சிவப்பு லெஹங்கா உடை அவரது நெற்றியில் மின்னும் செஞ்சிவப்புத் திலகத்துடன் மட்டுமே நிறைவுறுகிறது.

பிறப்பால் அந்நியராக இருந்தாலும் இந்திய ஃபேஷன் உலகுக்கு வருகை தருகையில் தவறாமல் புடவைகளை அணிந்து கொள்ள மறக்காத நவோமி பிரமிக்க வைக்கிறார். அவருக்கு வயது 47 என்றால் நம்பமுடிகிறதா?!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு

சவூதியில் 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றம்!

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது !

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT