அழகே அழகு

அழகாக நகம் வளர்த்து அருமையாக நெயில்பாலீஷ் போட்டுக் கொள்ள சில டிப்ஸ்!

கார்த்திகா வாசுதேவன்

பெரும்பாலான பெண்களின் சின்னச் சின்ன ஆசைகளில் அழகாக நகம் வளர்த்து அதற்கு அருமையாகக் கியூடெக்ஸ் போட்டுக்கொள்ளும் ஆசையும் ஒன்றாக இருக்கும். இதில் என்ன ஒரு சிக்கல் என்றால்... பெண்களில் குறிப்பிட்ட சதவிகிதத்தினருக்கு கண்டிப்பாக நகம் கடிக்கும் பிரச்னையும் இருப்பதால் சிலரால் என்ன தான் பிரயத்தனப் பட்டாலும் கூட அழகாக நகம் வளர்த்தல் என்பதெல்லாம் அடையா முடியாத நிராசையாகவே இருந்து வருகிறது. எப்படி இதைத் தவிர்ப்பது?

  • பொதுவாக நமது நகங்கள் புரதத்தினால் ஆனவை. நமது தலைமுடியில் இருக்கும் கரோட்டின் எனப்படும் புரதம் தான் நகங்களின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கிறது. எனவே கேரட், மஞ்சள் நிறப்பழங்கள், கீரைகள் உள்ளிட்டவற்றை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொண்டால் நகங்கள் வலிமையுடையதாக வளரும். 

  • பூண்டுச் சாறு எடுத்தோ அல்லது பேஸ்டாகவோ வாரம் இருமுறை நகங்களில் தேய்த்து சற்று நேரம் ஊற வைத்துக் கழுவித்துடைத்தாலும் நகங்கள் விரைவாக வளரும். பூண்டுச்சாற்றை நகங்கள் உறிஞ்சிக் கொள்ளும் வரை பொறுமையாகக் காத்திருந்து காய்ந்த பின்னரே நகங்களைக் கழுவ வேண்டும். 

  • பாத்திரம் துலக்கும் வேலைக்கும் நமது விரல் நகங்களுக்கும் எப்பொழுதும் ஏழாம் பொருத்தம். பாத்திரம் துலக்கப் பயன்படுத்தும் டிடர்ஜெண்டுகள் மற்றும் திரவங்களில் இருக்கும் ரசாயனங்கள் நகங்களை கடுமையாகப் பாதிக்கக் கூடியவை. எனவே அப்படி ஒவ்வாமை எதுவும் இருப்பின் தயவு செய்து கிளவ்ஸ் அல்லது கையுறைகள் அணிந்து கொண்ட பின்னரே பாத்திரம் துலக்கும் வேலையைச் செய்வது எனும் கட்டுப்பாட்டை தமக்குத் தாமே விதித்துக் கொள்ள வேண்டும். 

  • தினமும் நகங்களை வெட்டி ஒழுங்குபடுத்துவதை ஒரு கடமையாகக் கருதவேண்டும். அப்படிச் செய்வதால் மட்டுமே எளிதில் உடையக் கூடிய மெல்லிய நகங்களை நாம் அடையாளம் கண்டு அதற்குப் பொருத்தமான தீர்வுகள் காண முடியும்.

  • நகங்கள் மிக மெல்லியதாக எளிதில் உடைந்து வடிவமும், அழகும் கெடும் நிலையில் இருப்பின் அத்தகைய நகங்களில் தினமும் படுக்கைக்குச் செல்லும் முன் பெட்ரோலியம் ஜெல்லி தடவி பராமரிக்க வேண்டும்.  

  • அதே போல நீங்கள் தினம் தோறும் விதம் விதமாக, அணியும் உடைகளுக்குப் பொருத்தமான அத்தனை நிறங்களிலும் கியூடெக்ஸ் அல்லது நெயில் பாலிஷ் பயன்படுத்தும் கியூடெக்ஸ்பிரியர்கள் எனில்... ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்; எப்போதும் தரமான நெயில் பாலிஷ் பிராண்டுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இன்னும் குறிப்பிட்டுச் சொல்வதென்றால் நகங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் நிறைந்த நெயில் பாலிஷ்கள் எல்லாம் இப்போது மார்கெட்டில் கிடைக்கிறது. அவற்றுள் தரமான பிராண்டுகளை மட்டுமே வாங்கிப் பயன்படுத்தலாம். 

  • வறண்ட, பொலிவு குன்றிய நகங்களே எளிதில் உடையும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன. எனவே நகங்களை எப்போதுமே வறண்டு போக அனுமதிக்காதீர்கள். உள்ளங்கையில் சில துளிகள் ஆலிவ் எண்ணெய் எடுத்துக் கொண்டு அதை நகங்களில் தேய்த்து தினமும் மசாஜ் செய்ய வேண்டும். 

  • தப்பித் தவறியும் நகங்களை கடிப்பதையோ, அல்லது கீறுவதையோ ஒரு போதும் செய்யாதீர்கள். அப்படிச் செய்வதால் நகங்களின் வலிமை குறையும். 

  • நீங்கள் தேர்ந்தெடுக்கும் நெயில் பாலீஷ்களில் ஃபார்மால்டிஹைடு, டொலுவீன், மற்றும் சல்ஃபோனமைட் உள்ளிட்ட ரசாயனங்கள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். அவை நகங்களின் ஆரோக்யத்துக்கு கேடு விளைவிக்கும் தன்மை கொண்டவை. 

மேற்கண்ட டிப்ஸ்களை எல்லாம் சரியாகப் பின்பற்றினீர்கள் எனில் உங்களது நகங்கள் அழகாக, ஆரோக்யமாக வளரும். அதில் உங்களுக்குப் பிடித்த வண்ணங்களில் எல்லாம் நீங்கள் நெயில் பாலீஷ் போட்டுக் கொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT