அழகே அழகு

உங்கள் பாதம் மெத் மெத்தென்று பளிச்சென்று விளங்க என்ன செய்யலாம்?

சினேகா


தினமும் இரவில் உறங்கச் செல்வதற்கு முன்பு ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு, எலுமிச்சைச்சாறு, பேபி ஷாம்பு ஆகியவற்றைப் போட்டு பாதங்களை 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும்.  

அதன் பிறகு மெல்லிய பிரஷ்சினால் சுத்தம் செய்யவும். இவ்வாறு வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் செய்து வரவும். பளிச் பாதங்களை நீங்களே காண்பீர்கள்.

இதன் அடுத்த கட்டம், பாதங்களை ஈரம்போக ஒரு மெல்லிய காட்டன் துணியால் துடைத்துவிட்டு, நல்லெண்ணெயை லேசாக சூடு செய்து காலில் தடவுங்கள்.

பாதங்கள் மிருதுவாக இருக்க வேண்டுமானால் பீர்க்கங்காய் நார் கொண்டு தினமும் குளிக்கும்போது பாதத்தில் நன்றாக 5 நிமிடம் தேய்த்து வந்தால் பாதங்கள் மிருதுவாகி விடும்.

பாதத்தில் வெடிப்பு உள்ளவர்கள் வீட்டில் மருதாணி இலையை விழுது போல நன்கு அரைத்து வெடிப்புள்ள இடங்களில் வாரந்தோறும் தடவி வந்தால் வெடிப்பு நீங்கும்.  

காலில் காய்ப்பு, தழும்பு ஏற்பட்ட இடத்தில் தேங்காய் எண்ணையை தடவி லேசாக மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக அத்தழும்பு மறைந்து விடும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

SCROLL FOR NEXT