அழகே அழகு

நீங்கள் பேரழகி ஆக வேண்டுமா?

கீழ்கண்டவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை செய்து வந்தால் போதும் நீங்கள் பேரழகி ஆகிவிடலாம்.

சி.ஜெயலட்சுமி

கீழ்கண்டவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை செய்து வந்தால் போதும் நீங்கள் பேரழகி ஆகிவிடலாம்.

நன்றாக அரைத்த ஆப்பிள் விழுது, பால், பச்சரிசி மாவு இவற்றை சம அளவு கலந்து முகத்தில் பூசி மெதுவாக மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்து பாலுடன் சிறிது தண்ணீரைக் கலந்து முகத்தைக் கழுவ வேண்டும்.

ரோஜா, மரிக்கொழுந்து, மல்லி, செம்பருத்தி, தாழம்பூ, ஆரஞ்சு, எலுமிச்சைத் தோல், கஸ்தூரி மஞ்சள், பச்சைப் பயிறு, வெட்டிவேர் இவற்றை நன்றாக உலர்த்தி பொடி செய்து பாட்டிலில் அடைத்து தினமும் சிறிது எடுத்து ரோஸ் வாட்டர் எலுமிச்சை சாற்றுடன் கலந்து முகத்தில் பூசி பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழவ முகம் பளிச்சிடும்.

பாதாம் பருப்பு, பேரிச்சம்பழம், கசகசா, வெட்டிவேர் போன்றவற்றை தலா இரண்டு கிராம் அளவு எடுத்து அவற்றுடன் சேர்த்து நன்றாக அரைத்து முகம், கழுத்து பகுதிகளில் தடவி பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

கடலை மாவு, சந்தனப் பவுடர், பால்பவுடர் இவற்றுடன் எலுமிச்சைசாறு, பன்னீர், சிறிதளவு மஞ்சள் கலந்து நன்றாக குழைத்து பசை போல் செய்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி பத்து நிமிடம் கழித்து கழுவ முகத்திலுள்ள கருப்பு புள்ளிகள் மறைந்து முகம் பளபளப்பு பெறும். புதினா சாற்றையும் இத்துடன் சேர்த்துக் கொள்ளலாம்.

எண்ணெய்ப் பசை சருமம் கொண்டவர்கள் எலுமிச்சை சாற்றை சற்று அதிகமாக கலந்து கொள்ளலாம்.

(அழகு குறிப்புகள் நூலிலிருந்து)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்திலிருந்து வந்த ரசமலாய்! பாம்பே என்று பேசிய அண்ணாமலையை விமர்சித்த ராஜ் தாக்கரே

தங்கம், வெள்ளி விலை மீண்டும் அதிரடி உயர்வு

காங்கிரஸின் துரோகத்தை பராசக்தி காட்டியுள்ளது: அண்ணாமலை

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

தெலங்கானா: 300 தெரு நாய்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 9 பேர் மீது வழக்கு

SCROLL FOR NEXT