செய்திகள்

கூகுள் பிளே ஸ்டோரில் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளுக்கான மாதிரி வினா, விடைத்தாள்களுடன் இலவச ஆண்ட்ராய்டு செயலி அறிமுகம்!

RKV

முன்னாள் சென்னை மேயர் சைதை எஸ்.துரைசாமியால் நடத்தப்படும் மனிதநேயம் இலவச ஐஏஎஸ் அகாதெமி சார்பில் போட்டித் தேர்வுகளுக்கு உதவும் விதமாக இலவச ஆண்ட்ராய்டு செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் செயலியின் மூலமாக இந்திய குடிமைப் பணிகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தங்களது வீட்டிலிருந்தபடியே படித்து ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராகலாம்.

மனிதநேயம் அறக்கட்டளை சார்பாக நடத்தப்படும் இந்த ஐஏஎஸ் பயிற்சி வகுப்புகள் முற்றிலும் இலவசமானவை. இந்த வகுப்புகள் சென்னையில் நடத்தப்படுவதால், சென்னை வந்து பயிற்சி மேற்கொள்ள இயலாத பிற மாணவர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே குடிமைப் பணிகளுக்கான நுழைவுத் தேர்வுக்கு தயார் செய்ய இந்தச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. ‘மனிதநேயம் ஐஏஎஸ் & ஐபிஎஸ் ஃப்ரீ கோச்சிங் சென்ட்டர்’ (Manithaneyam IAS & IPS free coaching centre) என்ற பெயரில் தற்போது அந்தச் செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

இந்தச் செயலியில் மாக் டெஸ்டு வசதிகள் உண்டு.

இதன் மூலமாக தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் இந்தச் செயலியின் மூலமாக இலவச மாதிரி வினா, விடைத்தாள்களை ஆன்லைனிலேயே பெற்று, சோதனைத் தேர்வுகளை எழுத முடியும். அதோடு தேர்வின் வினாக்களுக்கான விடைகளையும் சரியா/தவறா என உடனடியாகச் சரி பார்த்து தேர்வுகளில் தாங்கள் பெற்றுள்ள மதிப்பெண்களையும் அறிந்து கொள்ள முடியும் விதத்தில் இந்தச் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இலவச மாதிரி வினாத்தாள்களும், விடைத்தாள்களும் ரெகுலராக அப்டேட் செய்யப்படுவதோடு வரப்போகும் போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பையும் இந்தச் செயலியின் மூலமாக மாணவர்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும் என மனிதநேயம் அறக்கட்டளை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு கூறுகிறது.

போட்டித் தேர்வுக்குத் தயாராகும் கிராமப்புற மாணவ, மாணவர்களுக்கான மிக அரிய வாய்ப்புகளுள் இதுவும் ஒன்று. 

இந்திய குடிமைப் பணித் தேர்வுகளுக்கு தயாராகும் ஆர்வமுள்ள மாணவர்கள் இந்தச் செயலியைப் பயன்படுத்தி தங்களது பயிற்சியை மேலும் வலுப்படுத்திக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

SCROLL FOR NEXT