செய்திகள்

ஒரு அன்றாடங்காய்ச்சியின் வருட வருமானத்திற்கு நிகராம் இந்த நட்சத்திர குழந்தையின் ஷூ விலை!

சுஹானா அணிந்திருந்த Jennifer’ wedge sneakers from Giuseppe Zanotti எனும் ஷூ பிராண்டின் அடக்க விலை அதிகமில்லை குறைந்த பட்சம் ரூ.69,000 தானாம். இந்த ஷூவின் டாலர் மதிப்பு $995.00.

சரோஜினி

பிரபலம் என்றாலே எப்போதும் பிராப்ளம் தான்! அவர்கள் என்ன செய்தாலும் மக்கள் அவர்களை கவனித்துக் கொண்டே தான் இருப்பார்கள். அதிலும் வித்யாசமாக அவர்கள் எதையாவது அணிந்து கொண்டு பொது இடங்களுக்கு வந்து விட்டால் சும்மா விட்டு விடுவார்களா என்ன? சமீபத்தில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானின் மகள் சுஹானா கான் தனது தோழிகளுடன் ஷாப்பிங் சென்றிந்தார். சுஹானா மும்பையில் இருக்கிறார் என்றால் பரபரப்பாக எதையாவது செய்து நிச்சயம் ஒரு முறையாவது செய்திகளில் இடம்பெற்று விடக்கூடிய பாக்கியசாலி.

Photo by Varinder chawla.

இந்த முறை தனது தோழிகளுடன் நேரம் செலவளிக்க வீட்டை விட்டு வெளியே வந்த சுஹானா, அப்போது அவர் காலில் அணிந்திருந்த வித்யாசமான ஷூ ஒன்றுக்காக தற்போது மீண்டும் செய்திகளில் அடிபடும் பாக்யசாலி ஆகியிருக்கிறார். சுஹானா அணிந்திருந்த Jennifer’ wedge sneakers from Giuseppe Zanotti எனும் ஷூ பிராண்டின் அடக்க விலை அதிகமில்லை குறைந்த பட்சம் ரூ.69,000 தானாம். இந்த ஷூவின் டாலர் மதிப்பு $995.00. இந்தியாவில் ஒரு சாதாராண அன்றாடங்காய்ச்சியின் வருட நிகர வருமானமே அவ்வளவு தான். மிடில் கிளாஸ் மக்கள் என்றால் அந்தப் பணத்தில் ஒரு வருடாந்திர இந்திய டூர் சென்று திரும்பி இருப்பார்கள். அப்பர் மிடில் கிளாஸ் என்றால் வார இறுதியில் ஒரு முறை தாய்லாந்துக்கோ அல்லது மலேசியாவுக்கோ டூர் அடித்து திரும்பி இருப்பார்கள். இத்தனை அனுகூலங்கள் இருக்கக் கூடிய 69,000 ரூபாயை அந்தச் சிறுமி தனது ஷூவுக்காக செலவளித்திருந்தார் என்பது தான் அந்த ஷூவுக்கான ஹைலைட்!

ஷூ விலைக்கான ஆதாரம்...


Image courtesy: inuth.com, Varinder chawla.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துறையூா் பகுதியில் நாளை(ஆக.4) மின் தடை

மணப்பாக்கம் சின்ன கன்னியம்மன் கோயில் ஆடி தீமிதி விழா

முசிறி அருகே குடிநீா் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

ஆக. 7-இல் ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயில் முப்பெரும் விழா

முசிறியில் காரில் வெளி மாநில மதுபாட்டில் கொண்டு சென்றவா் கைது

SCROLL FOR NEXT