செய்திகள்

சங்க விஷயத்தில் மூன்று வயதுச் சிறுவனுக்கு இருக்கும் தெளிவு வயது வந்தவர்களுக்கும் இருந்தாகனுமே!

இது ஒரு வேடிக்கையான விடியோ தான். ஆனால் இதிலிருக்கும் நியாய உணர்வைப் பாருங்கள். சிறுவன் அதை உணர்ந்து தான் சொல்லியிருப்பான் என்று கருத வகையில்லையென்றாலும் அவன் சொல்வதில் இருக்கும் அவன் எண்ணத்தில் இருக்க

RKV

கையில் ஆண்ட்ராய்டும், ஆப்பிளும் இருந்தால் இன்றைக்கு எல்லோரும் பத்திரிகையாளர்கள் தான். காண்பதையும், கேட்பதையும் சுட்டுத் தள்ளி அங்கங்கே அப்லோடி விடுவதில் சமர்த்தர்கள் நம் மக்கள். அந்த வகையில் இன்று ட்ரெண்ட் ஆகிக் கொண்டிருக்கும் ஒரு விடியோ இது.

பச்சை சட்டை அந்தச் சிறுவனுக்கு மிஞ்சிப் போனால் மூன்று வயதே இருக்கக் கூடும். அவனிடம் விளையாட்டாக ஒரு நபர் ... இன்னைல இருந்து உன்னை இளைஞர் சங்கத்துல சேர்த்தாச்சு... போய் உங்க அப்பாகிட்ட 2000 ரூபாய் வாங்கிட்டு வா, சங்கத்துல உறுப்பினர் ஆகிடலாம் என்கிறார். சரி சாப்பிட்டு விட்டு வாங்கி வருகிறேன் என்று நகர்கிறான் சிறுவன். அந்த நபரோ விடாமல் சங்கம் முக்கியமா? சாப்பாடு முக்கியமா? என்று மிரட்டும் தொனியில் கேட்க... சிறுவனும் விடாமல், சப்பாடு முக்கியம் என நகர்கிறான்.  அப்போது இளைஞர்... சங்கத்துல உறுப்பினர் நீ, சாப்பாடு முக்கியமா? என்று மேலும் சிறுவனை கண்டிக்கும் தொனியில் விளையாட்டாய் குரலுயர்த்திப் பேச முயல... பதிலுக்கு சிறுவன் அழத்தொடங்கி... அப்போ எனக்குப் பசிக்குமில்ல, சாப்பிடக் கூடாதா? எனும் காட்சி இன்று இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

இது ஒரு வேடிக்கையான விடியோ தான். ஆனால் இதிலிருக்கும் நியாய உணர்வைப் பாருங்கள். சிறுவன் அதை உணர்ந்து தான் சொல்லியிருப்பான் என்று கருத வகையில்லையென்றாலும் அவன் சொல்வதில் இருக்கும் அவன் எண்ணத்தில் இருக்கும் நியாயம் சங்க வேலைகளுக்காக தங்களது உடல், பொருள், ஆவி அத்தனையையும் அர்ப்பணித்து விட்டு வீட்டைக் கவனிக்காமல், குடும்பத்தை கவனிக்காமல் சங்கம், சங்கம் என்று ஓடிக்கொண்டிருக்கும் அத்தனை பேரும் உணர்ந்து கொண்டாக வேண்டிய நீதி இதிலிருப்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மண்டல அளவிலான கால்பந்துப் போட்டி: ஸ்ரீஅம்மன் கலை அறிவியல் கல்லூரி முதலிடம்

கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்: அமைச்சா் பி.கே.சேகா் பாபு வழங்கினாா்

ஜூடோ போட்டிகளில் பதக்கங்கள் குவித்த அரசுப் பள்ளி மாணவா்கள்: மாநகராட்சி ஆணையரிடம் வாழ்த்து

விஸ்வகா்மா ஜெயந்தி கொண்டாட்டம்

ஓவேலி மலைத்தொடரில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலா்கள்

SCROLL FOR NEXT