செய்திகள்

பிரபல DJ ‘ஆடம் ஸ்கை’ பாலி தீவில் மரணம்!

Fat boy slim, David guetta, The Scissor Ssiters உள்ளிட்ட பிரபல இசைக்கலைஞர்களுடன் இணைந்து மேடையைப் பகிர்ந்து கொண்ட சிறப்பு ஆடமுக்கு உண்டு. ஆடமின் பிரசித்தி பெற்ற கிளப் கீதங்களில் குறிப்பிடத்தக்கவை

DIN

ஆஸ்திரேலியாவின் பிரபல DJ ஆடம் ஸ்கை சனிக்கிழமை இந்தோனேசியாவின் பாலி தீவில் நேர்ந்த விபத்தொன்றில் மரணமடைந்தார். ஆடமுக்கு வயது 42. கடந்த ஆண்டு ஆசியாவின் பிரபல DJக்களுக்கு நடத்தப்பட்ட சர்வே ஒன்றில் மூன்றாம் இடம் பெறும் அளவுக்கு ஆசிய அளவிலான DJ க்களிடையே குறிப்பிடத்தகுந்தவர் ஆடம் ஸ்கை. விடுமுறையைக் கழிப்பதற்காக இந்தோனேசியாவில் பாலி தீவுக்குச் சென்றிருந்த ஆடம் ஸ்கை, நீச்சல்குளத்தில் விபத்தில் சிக்கிக் கொண்ட தனது தோழியைக் காப்பாற்றச் சென்ற போது தவறுதலாகக் கண்ணாடிக் கதவில் நசுக்கப்பட்டு மீள முடியாமல் அதீத ரத்தப்போக்கு மற்றும் படுகாயங்களினால் மரணமடைந்ததாக இந்தோனேசிய ஊடகங்கள் தகவல் அளித்துள்ளன. அதைத் தொடர்ந்து ஆடம் ஸ்கையின் மரணம் அவரது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்திலும் மிகுந்த துக்கத்துடன் பகிரப்பட்டுள்ளது.
 


மரணமடைந்த DJ ( டிஸ்க் ஜாக்கி) ஆடம் ஸ்கையின் நிஜப்பெயர் ஆடம் நீட். ஆஸ்திரேலிய ரசிகர்கள் ஆடமை ரைஸிங் ஆஸி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடுவது வழக்கமென ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த JUICE பத்திரிகை தெரிவிக்கிறது. 

இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள ஆடம்பரமான கேளிக்கை மற்றும் ஓய்வு விடுதியொன்றுக்கு தன் தோழிகளுடன் விடுமுறையைக் கொண்டாடச் சென்ற இடத்தில் ஆடம் துரதிர்ஷ்டவசமாக இப்படியொரு கோர விபத்தில் சிக்கிக் கொண்டார். நீச்சல் குளத்தில் டைவ் செய்து நீந்திக் கொண்டிருந்த தோழிகளில் ஒருவர் தவறுதலாக காலை உடைத்துக் கொள்ளவே அவரைக் காப்பாற்றச் சென்ற நேரத்தில் தான் ஆடமுக்கு இந்த விபத்து நேர்ந்திருக்கிறது. தோழியைக் காப்பாற்றச் சென்றவர் கடைசியில் அதே நீச்சல் குளத்தில் இருந்து ரத்த வெள்ளத்துடன் மீட்கப்பட்டிருக்கிறார். தோழி கடுமையான காயங்களுடன் உயிர் தப்பி விட்டார். ஆனால் ஆடம் மட்டும் மீளாப்பயணம் மேற்கொண்டு விட்டார். 

ஆடம் ஸ்கையின் Deep Session vol.1 

விபத்துக்கு முக்கிய காரணமாக ஆல்கஹால் போதை இருக்கக் கூடும் என ஆஸ்திரேலிய போலீஸார் தெரிவித்துள்ளனர். ஆடமின் உடலை மீட்க அவரது உறவினர்களும், நெருங்கிய நண்பர்களும் இன்று இந்தோனேசியாவுக்குப் பயணப்பட்டிருக்கிறார்கள். அங்கிருக்கும் ஹில் ஸ்டோன் வில்லாஸ் கேளிக்கை விடுதியில் தான் விபத்து நிகழ்ந்திருக்கிறது என்பதால் ஆடமின் உடலை மருத்துவ மற்றும் காவல்துறை ஃபார்மாலிட்டிஸ்கள் முடிந்த பின்னர் பெற்றுக் கொள்ளவே அவர்கள் அங்கு விரைந்திருப்பதாக ஆடமின் முகநூல் பக்கத்தில் கூறப்பட்டிருக்கிறது.

Fat boy slim, David guetta, The Scissor Ssiters உள்ளிட்ட பிரபல இசைக்கலைஞர்களுடன் இணைந்து மேடையைப் பகிர்ந்து கொண்ட சிறப்பு ஆடமுக்கு உண்டு.

ஆடமின் பிரசித்தி பெற்ற கிளப் கீதங்களில் குறிப்பிடத்தக்கவை Illogical, Larynx மற்றும் Kreatine.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT