உதட்டிற்கு மேல் உள்ள முடியை நீக்கும் எளிய முறை
பெண்கள் பலருக்கும் உதட்டிற்கு மேல் முடி வளர்வது இப்போது சாதாரணமாகிவிட்டது. முகத்தின் அழகைக் கெடுக்கும் இதனை பலர் தவறான வழிமுறைகளில் நீக்குகின்றனர்.
பெண்கள் பலருக்கும் உதட்டிற்கு மேல் முடி வளர்வது இப்போது சாதாரணமாகிவிட்டது. முகத்தின் அழகைக் கெடுக்கும் இதனை பலர் தவறான வழிமுறைகளில் நீக்குகின்றனர்.
அழகு நிலையங்களில் 'த்ரெட்டிங்' என்று சொல்லப்படும் புருவங்களை அழகுபடுத்தலின்போது பெண்கள் உதட்டிற்கு மேல் உள்ள முடிகளையும் நீக்குகின்றனர். சிலர் கிரீம் தடவி ஷேவ் கூட செய்துகொள்கின்றனர். ஆனால் இதெல்லாம் தவறான வழிமுறையாகும்.
ஏனெனில் இவ்வாறு செய்வதால் உதட்டிற்கு மேல் முடி அதிகமாகவே வளரும். எனவே, காலம் ஆனாலும் முடிந்தவரை இயற்கையான முறையில் நீக்குவது நல்லது.
வீட்டில் உள்ள சில இயற்கைப் பொருள்களைப் பயன்படுத்தி இதனை எளிதாக நீக்க முடியும்.
முகத்தின் அழகைக் கூட்டும் மஞ்சள் தூள் பொதுவாகவே முகத்தில் தேவையற்ற முடிகள் வளர்வதைத் தடுக்கிறது. முந்தைய காலத்தில் பெண்கள் அழகுக்கு பயன்படுத்தும் முதன்மைப் பொருள் மஞ்சள். எனவே, மஞ்சள் தூளை வெறுமனே தண்ணீரில் கலந்து உதட்டின் மேல் தடவி நன்றாக காய்ந்ததும் தேய்த்து கழுவ வேண்டும்.
அதேபோன்று தயிறுடன் சிறிது கடலை மாவு, மஞ்சள் தூள் சேர்த்த கலவையை உதட்டின் மேல் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். இதனை தினமும் செய்துவர முடி வளர்ச்சி அவ்விடத்தில் தடைபடும். சாதரணமாக இந்த கலவையை கண் பகுதி தவிர முகம் முழுவதுமே தடவலாம். இதில் தயிருக்குப் பதிலாக பாலும்
எலுமிச்சைச்சாறும் அமிலம் என்பதால் முடியை நீக்க பயன்படுகிறது. ஆனால், எலுமிச்சைச் சாற்றை தனியே பயன்படுத்தக்கூடாது. சிறிது தண்ணீர் கலந்து அதனை உதட்டின் மேல் சிறிது நேரம் தேய்க்க வேண்டும். அல்லது எலுமிச்சை சாறுடன் சிறிது சர்க்கரை சேர்த்த கலவையை உதட்டின் மேல் 'ஸ்க்ரப்' செய்ய வேண்டும்.
முட்டையின் வெள்ளைக்கருவும் முடியை நீக்க பயன்படும். வெள்ளைக்கருவுடன் சிறிதளவு கோதுமை மாவு, 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலவையை உதட்டின் மேல் தடவி வர விரைவில் முடி உதிர்ந்து விடும்.