செய்திகள்

இரவில் ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதைச் சாப்பிடுங்கள்!

DIN

தூக்கமின்மை பலருக்கும் இருக்கும் ஒரு பிரச்னை. ஆழ்ந்த தூக்கம் வருவதற்கு பலர் பல்வேறு வழிகளை முயற்சித்து வருகின்றனர். அந்த வரிசையில் இரவில் தூங்கச் செல்லும்முன் சில உணவுகளை சாப்பிட்டுவிட்டு படுக்கச் செல்லுங்கள். தூக்கம் வருவதற்கான மெலடோனின் சுரப்பை அதிகரிக்க இந்த உணவுகள் உதவும். 

மூளையில் மெலடோனின் சுரப்பு அதிகமாகும்போது நமக்கு தூக்கம் வருகிறது. இந்த மெலடோனின் சுரப்பை தூண்டக்கூடிய உணவுகளை இரவில் எடுத்துகொண்டால் ஆழ்ந்த தூக்கத்தைப் பெற முடியும். 

செர்ரி பழங்கள் 

இரவில் தூங்கும்முன் ஓரிரு செர்ரி பழங்களை சாப்பிட்டுவிட்டுத் தூங்குங்கள். இது மெலடோனின் சுரப்பை அதிகரிக்கும் என்பதால் நல்ல தூக்கம் கிடைக்கும். 

வாழைப்பழம் 

மலிவான விலையில் கிடைக்கக்கூடிய வாழைப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் உள்ளது. மேலும் இதிலுள்ள ட்ரிப்டோபன் என்ற அமிலமானது மூளைக்குச் சென்று மெலடோனின் சுரப்பை ஏற்படுத்தும். உடலுக்கு ஆரோக்கியம் என்பதாலும் தினமும் இரவு தூங்கும் முன் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு படுக்கச் செல்லுங்கள். 

பால்

பாலில் உள்ள கால்சியம், புரதசத்து, லாக்டிக் அமிலம் இணைந்து தூக்கத்தை மேம்படுத்த உதவுகிறது. தனியாக பாலை குடிக்காமல் அதில் சிறிதளவு மஞ்சள் அல்லது ஏலக்காய் அல்லது மிளகுத் தூள் சேர்த்து குடிப்பது நல்லது என்று கூறுகின்றனர் ஆய்வாளர்கள். 

ஓட்ஸ்/தானியக் கஞ்சி 

இரவில் எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளை சாப்பிட்டு வந்தாலே தூக்கம் நன்றாக வரும். எனவே, ஓட்ஸ் அல்லது ஏதேனும் ஒரு தானியத்தில் கஞ்சி செய்து சாப்பிட்டு தூங்கச் செல்லுங்கள். 

ஆவியில் வேகவைத்த உணவுகள் 

இரவு உணவாக ஆவியில் வேக வைத்த உணவுகளாக இட்லி, இடியாப்பம், புட்டு ஆகியவற்றை சாப்பிடுவது நல்லது. 

இரவில் காரமான உணவுகள், துரித உணவுகள், எண்ணெயில் பொறித்தவை, அசைவ உணவுகள் உள்ளிட்டவற்றைத் தவிர்ப்பது நல்லது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

லக்னௌ பந்துவீச்சு; அணியில் டி காக் இல்லை!

SCROLL FOR NEXT