கோப்புப்படம் 
செய்திகள்

'காதல்' ஏற்பட எது முக்கியம் தெரியுமா?

காதல் உறவில் முதல் அபிப்ராயம்/எண்ணம் தான் முக்கியம் என சமீபத்திய ஓர் ஆய்வின் மூலமாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். 

DIN

காதல் உறவு... அனைவருக்கும் ஒருமுறையாவது ஏற்பட்டிருக்கும்/ஏற்படும் ஒன்றுதான். ஒருவர் மேல் காதல் எப்படி வருகிறது? எதன் அடிப்படையில் வருகிறது? என்றெல்லாம் பல கேள்விகளுக்கு பலவிதமாக பதில்கள் கூறப்படுகின்றன. 

காதல் ஏற்பட தோற்றம், அழகு, நடந்துகொள்ளும்விதம் என பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. 

ஆனால், காதல் உறவில் முதல் அபிப்ராயம்/எண்ணம்(First Impression) தான் முக்கியம் என சமீபத்திய ஓர் ஆய்வின் மூலமாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். 

காதல் உறவில் எது அடிப்படை, எது முக்கியம் என்று டேவிஸின் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் 'நேஷனல் அகாடமி ஆப் சயின்ஸஸ்' இதழில் வெளியிடப்பட்டுள்ளன. 

காதலில் இந்த முதல் அபிப்ராயம்தான் ஒருவரையொருவர் மீது ஈர்ப்பு ஏற்படவும் அந்த உறவு தொடரவும் காரணமாக இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். 

முதல் சந்திப்பில் ஏற்படும் அந்த முதல் எண்ணம்தான் அவர்களது உறவில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் கூறுகின்றனர். 

அதாவது ஒரு உறவு இணக்கமாக இருக்கவும் அது விலகிச் செல்லவும் காரணம் அந்த முதல் சந்திப்புதான். 

சுமார் 550-க்கும் மேற்பட்ட டேட்டிங்கில் ஈடுபடும் ஆண்கள் உள்ளிட்ட 6.600 பேரிடம் இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி, துணையைத் தேர்வு செய்தல், பிரபலம், பொருந்தக்கூடிய தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் ஒருவர் துணையைத் தேர்வு செய்கிறார். இது டேட்டிங்கிற்கு அதிகம் பொருந்தும். 

அதாவது டேட்டிங் அல்லது காதல் உறவுக்கு, பெரும்பாலானவர்களால் விரும்பப்படும் ஒருவரையோ பிரபலமான ஒருவரையோ அல்லது தனது நடவடிக்கைகளுடன் பொருந்தக்கூடிய ஒருவரையோ தேர்வு செய்வதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 

மேலும், எதிர்காலத்தில் காதல் உறவுகள் குறித்த அடுத்தகட்ட ஆய்வுக்கு இந்த ஆய்வின் முடிவுகள் பெரிதும் உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT