செய்திகள்

சர்க்கரை நோயிலிருந்து விடுபட... இந்த எண்ணெய்யைப் பயன்படுத்துங்க!

DIN

டைப் 2 சர்க்கரை நோய் பிரச்னையிலிருந்து விடுபட அவகோடா (ஆனைக் கொய்யா) பயன்படுத்தப்படுகிறது.

அவகோடா (வெண்ணெய்ப் பழம், ஆனைக் கொய்யா) பழத்தில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் மிகவும் பயனுள்ள சமையல் எண்ணெய்களில் ஒன்றாக பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் குறைவாக பயன்படுத்தப்பட்டாலும், அவகோடா எண்ணெய் மிகவும் நன்மை அளிப்பதாக உள்ளது.

இந்திய சமையலறைகளில் அவகோடா எண்ணெய்யின் பயன்பாடு பல ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. இந்த எண்ணெய்யில் அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் மற்றும் வைட்டமின்களான ஏ, டி, இ மற்றும் கே, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் கரோட்டினாய்டு புரதம் நிறைந்துள்ளது. இது எலும்பு மூட்டுகளைப் பலப்படுத்துகிறது மற்றும் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. அவகேடோ எண்ணெய் ரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது.

அவகோடா எண்ணெய்யின் சில நன்மைகள்:

* அவகோடா எண்ணெய்யில் உள்ள கெட்ட கொழுப்பைத் தவிர, அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு, ஹார்மோன்களின் சமநிலையையும் பராமரிக்கிறது. அதில் உள்ள ஊட்டச்சத்துகள் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன.

* அவகோடா எண்ணெய் கீல்வாதத்தால் ஏற்படும் வலியைக் குறைக்க உதகிறது என்று பல ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

* அவகோடா எண்ணெய்யில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் ஒலிக் அமிலம் எடையைக் குறைக்க உதவுகிறது.

* இதய நோய், பக்கவாதம் மற்றும் டைப் 2 சர்க்கரை நோய்  பிரச்னையிலிருந்து, அவகோடா எண்ணெய்யில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் காக்கின்றன மற்றும் நமது நீண்ட ஆயுளை மேம்படுத்த உதவுகிறது.

* அவகோடா எண்ணெய்யில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சூரிய ஒளியால் சருமத்தில் ஏற்படும் பாதிப்பை சரி செய்ய உதவுகிறது. வைட்டமின் இ, டி, புரதம், பீட்டா கரோட்டின், லெசித்தின் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் சருமத்தை குளிர்விக்க உதவுகின்றன.

மருத்துவரின் ஆலோசனையை மேற்கொண்டு அவகோடா எண்ணெய்யை பயன்படுத்தலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரவிந்த் கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்!

பாரிஸில் அஹானா கிருஷ்ணா!

வார பலன்கள்: 12 ராசிக்கும்..

உ.பி.யை நோக்கி 'இந்தியா' புயல்! மோடி மீண்டும் பிரதமராக மாட்டார்! ராகுல் பேச்சு

விழுப்புரத்தில் 94.11% தேர்ச்சி: மாநில அளவில் 6ம் இடம்!

SCROLL FOR NEXT