செய்திகள்

நீங்க டயட்ல இருக்கீங்களா? அப்போ நேரத்துக்கு சாப்பிடுங்க

DIN

டயட்.. உடல் எடைக்காக, நோய்க்காக வேறு பல காரணங்களுக்காக பலரும் பல விதங்களில், பல காலங்களில் கடைப்பிடிக்கும் ஒரு விஷயம். 

ஆனால், டயட் இருப்பது என்பதெல்லாம் அந்த காலத்தில் இல்லைங்க. நேரத்துக்கு எழுந்து கடினமா உழைத்து பசிக்கும்போது சத்தான உணவா சாப்பிட்டு நிம்மதியா இருந்தாங்களோ இல்லையோ நிம்மதியா வாழ்ந்திருக்காங்க.. இப்போ இருக்கும் வாழ்முறைபோல் அல்லாமல்.

சரி.. பழைய கதை இப்போ எதுக்கு? கடினமான டயட்ல இருந்தாலும் கூட உடல் எடை குறையவே இல்லையே என்று வருத்தப்படுபவர்களுக்கும் நமக்கு எந்த விதமான டயட் சரியாக இருக்கும் என்று தேடுபவர்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்காங்க.

ஒரு டயட் என்பது எதைச் சாப்பிடலாம் எதைச் சாப்பிடக் கூடாது என்று சொல்வது மட்டுமல்ல, உங்கள் உணவு முறையை ஒழுங்குபடுத்துவதும் கூட.

இப்போதெல்லாம் நல்ல உணவு முறை நிபுணர்கள் கூட, ஒரு சிறந்த டயட் என்று ஐடியா கேட்டால் உடனே அருவி போல சொல்லுவது இதைத்தான். அதாவது டயட் இருப்பதற்கு முன்பு, மூன்று வேளையும் சரியான நேரத்தில் சாப்பிட்டுப் பழகுங்கள். பிறகு உங்கள் டயட்டைத் தொடங்குங்கள் என்பதே.

அதாவது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நாள்தோறும் சாப்பிட்டு வந்தால், உங்கள் உடல் அந்த உணவிலிருந்து கிடைக்கும் கலோரிகளை கிரகித்துக் கொள்ளும் ஆற்றலை தாமாகவே பெற்றுக் கொள்ளும். அதை விடுத்து டயட் என்ற பெயரில் சாப்பிடாமல் இருந்தால் இரண்டாம் வகை நீரிழிவு நோய்தான் வரும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கையும் விடுக்கிறார்கள்.

ஒரு வாரத்தில் மூன்று வேளையும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிட்டுப் பழகுங்கள். ஒரு வேளை உணவை சாப்பிடாமல் இருப்பதும் கூட நிச்சயம் உடல் மற்றும் மன ரீதியான சோர்வை ஏற்படுத்தும்.

எனவே, டயட், உணவு முறையில் மாற்றம் என எதையும் செய்யும் முன் ஒற்றை நினைவில் கொள்ளுங்கள். எதுவாக இருந்தாலும் நேரத்துக்கு சாப்பிட வேண்டும் என்பதுதான் அது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT