செய்திகள்

காதலர் தினத்தில் என்ன பரிசளிக்கலாம்? இதோ சில டிப்ஸ்

கடந்த இரண்டு நாள்களாக, காதலருக்கு அல்லது வாழ்க்கைத் துணைக்கு, காதலர் தினத்தில் என்ன பரிசளிக்கலாம் என்று யோசித்து யோசித்து தூக்கத்தை தொலைத்துவிட்டீர்களா?

IANS


கடந்த இரண்டு நாள்களாக, காதலருக்கு அல்லது வாழ்க்கைத் துணைக்கு, காதலர் தினத்தில் என்ன பரிசளிக்கலாம் என்று யோசித்து யோசித்து தூக்கத்தை தொலைத்துவிட்டீர்களா?

காதலர் தினமே வந்துவிட்டது. மிகச் சிறந்த காதலர் தின பரிசை உடனே வாங்கி உங்கள் காதலருக்கு அளித்த அன்பை தெரிவிக்க வேண்டாமா?

உங்கள் காதலர் அல்லது காதலி, இன்றைய நாளை மிகச் சிறப்பாக உணர வைக்க வேண்டும். கவலை வேண்டாம்.

இங்கே சில பரிசுப் பொருள்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவை நிச்சயம் காதலர் தின சிறப்புப் பரிசாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இவை, காதலர் தினத்தில் காதலர்களால் பகிரப்படும் மிகச் சிறந்த பரிசுப் பொருள்களில் ஒன்றாக உள்ளன. இதில் உங்களுக்கு ஏற்றதை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

சிவப்பு ரோஜா
சிவப்பு ரோஜா அல்லது சிவப்பு ரோஜாக்கள் அடங்கிய பூங்கொத்தை காதலர்/காதலிக்கு பரிசளிப்பது மிகச் சிறப்பு. உங்களது பரிசு எவ்வளவு விலை உயர்ந்ததாக இருந்தாலும் ஒரு ஒற்றை சிவப்பு ரோஜாவுக்கு ஈடு இணையாகாது. ஒரு வேளை உங்கள் காதலர் /காதலி முகத்தில் மிக அருமையான புன்னகையைப் பார்க்க விரும்பினால் நிச்சயம் அது சிவப்பு ரோஜாக்களைக் கொண்ட பூங்கொத்தாக இருக்கும்.

இரவு உணவு 
இன்று பெரும்பாலும் உணவகங்கள் காதலர் தின சிறப்பு சலுகைகள் பலவற்றையும் அறிவித்திருக்கும். எனவே, ஏதேனும் ஒரு இரவு உணவகத்தில் உங்கள் காதலர் தின சிறப்பு உணவை ஒன்றாக சாப்பிடலாம். இது நிச்சயம் நல்ல அனுபவத்தைக் கொடுக்கலாம்.

புத்தகங்கள்

உங்கள் காதலர் / காதலிக்கு புத்தகம் படிக்கும் ஆர்வம் இருந்தால் உங்களது சிறந்த தேர்வாக புத்தகம் இருக்கலாம். அவர் படிக்க விரும்பும் புத்தகத்தை அல்லது அவர் விரும்பும் எழுத்தாளரின் புதிய புத்தகத்தை தேடிப்பிடித்து வாங்கிக் கொடுத்துவிடுங்கள்.

செடிகள்
இதை விட வேறு என்ன சிறந்த பரிசு இருந்துவிட முடியும். அதுவும் பூச்செடிகள் மிகச் சிறந்த தேர்வாக இருக்கலாம். பூத்துக் குலுங்கும் பூவுக்கே மயங்கும் காதலர்கள், பூத்துக் குலுங்கும் பூக்களைக் கொண்ட செடியையே வாங்கிக் கொடுத்தால் நிச்சயம் மகிழ்வார்கள்.

நகைகள்
காதலர் தினம் என்பதால் மோதிரம் முதல் ஏராளமான காதல் சின்னங்ளைக் கொண்ட நகைகள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன. அவற்றில் உங்களது விருப்பத்துக்கு ஏற்ற ஒன்றை வாங்கிக் கொடுத்து அசத்தலாமே..
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீரன் சின்னமலை நினைவு நாள்: மலர் தூவி மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி!

பென்னாகரம் காவல் நிலையம் முன்பு பாமகவினர் சாலை மறியல்

கூட்டணியிலிருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தமளிக்கிறது: டிடிவி தினகரன்

சண்டீகரில் பணம் மோசடி வழக்கு: தேடப்பட்ட கோவை குற்றவாளி கரூரில் சிபிஐ போலீஸாரால் கைது

நான் கூலியில் நடிக்க ஒரே காரணம் இதுதான்: ஆமிர் கான்

SCROLL FOR NEXT