செய்திகள்

தலைமுடி பராமரிப்பு: குளிக்கும்போது இந்த 5 விஷயங்களைச் செய்யாதீங்க!!

ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி, தலைமுடி பராமரிப்பு என்பது அழகுப் முக்கியமான அவசியமான ஒன்று. 

DIN

ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி, தலைமுடி பராமரிப்பு என்பது அழகுப் முக்கியமான அவசியமான ஒன்று. 

சுற்றுச்சூழல் மாசு, மன அழுத்தம், சரியான பராமரிப்பின்மை உள்ளிட்ட பல காரணங்களால் தலைமுடி உதிர்தல், முடி மெலிந்து காணப்படுதல், பொடுகு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன.

எனவே, முடிந்தவரை சத்தான உணவுகளை உட்கொள்வதுடன் தலைமுடி பராமரிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.

தலைக்கு குளிக்கும்போது கவனத்தில் கொள்ளவேண்டிய, தவிர்க்க வேண்டிய விஷயங்கள்...

♦ஷாம்பூவை தண்ணீரில் கலந்து ஸ்கால்ப் மற்றும் முடியில் அப்ளை செய்ய வேண்டும். ஸ்கால்பில் ஷாம்பூ இல்லாத அளவுக்கு நன்றாக தண்ணீர் விட்டு முடியை அலச வேண்டும். ரசாயனம் குறைந்த ஷாம்பூக்களை மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி பயன்படுத்தினால் பிரச்னை சரியாகும்.

♦ தலைக்கு குளிக்கும்போது குறைந்தபட்சம் தலையில் எண்ணெயாவது வைத்து குளிக்க வேண்டும். முடி வறட்சியாக இருக்கக் கூடாது. 

♦தலைமுடி உதிர்வதைத் தடுக்க முட்டை வெள்ளைக்கரு, மருதாணி உள்ளிட்ட ஏதேனும் ஒரு இயற்கையான ஹேர் மாஸ்க்கை பயன்படுத்தலாம். 

♦ஷாம்பூ பயன்படுத்திய பின்னர் கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும். கண்டிஷனரை ஸ்கால்பில் படாதவாறு உபயோகிக்க வேண்டும். இல்லையெனில் முடி மிகவும் வறட்சியாகி உடைந்துவிடும். 

♦ தலைமுடி நன்றாக காய்ந்தபின்னரே சீப்பு பயன்படுத்த வேண்டும். ஈரத்துடன் பயன்படுத்தினால் முடியின் உறுதித்தன்மை குறைந்துவிடும். அதுபோல ஈரத்தில் பின்னல் போடக்கூடாது.

♦தலைமுடியை டவல் கொண்டு லேசாக துடைக்க வேண்டும். அழுத்தித் துடைக்கக்கூடாது. 

♦ உடல் வெப்பநிலை அதிகரித்தாலும் முடி உதிர்தல் ஏற்படும். எனவே உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள சத்தான பழங்களை சாப்பிடலாம்.

♦ தலைமுடி வறட்சியைத் தடுக்க சீரம் பயன்படுத்தலாம்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஜல் அகர்வால் விபத்தில் சிக்கினாரா?

கோவையில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்!

தேங்காய், எண்ணெய் பாட்டில்கள் திருட்டு.. மும்பை விமான நிலைய அதிகாரிகள் 15 பேர் பணிநீக்கம்!

குடியரசு துணைத் தலைவர் தோ்தல்! முதலில் வாக்களித்த பிரதமர் Modi

காஞ்சிபுரம் டிஎஸ்பி கைது: மேல்முறையீட்டு மனு இன்று பிற்பகல் விசாரணை!

SCROLL FOR NEXT