தலைமுடி உதிர்தல் பிரச்னை இப்போது பெரும்பாலானோருக்கு இருக்கிறது. இதனை சரிசெய்ய பல வித எண்ணெய்கள், ஷாம்பூக்கள், ஹேர் பேக்குகளைப் பயன்படுத்துகின்றனர்.
ஆனால் தலைமுடி வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெயே போதுமானது என்று அழகு சார்ந்த நிபுணர்கள் பலரும் கூறுகின்றனர்.
தலைமுடி ஆரோக்கியத்திற்கு தேங்காய் எண்ணெய் மிக முக்கியமான பொருள். இதில் வைட்டமின்கள், தாதுக்கள், கொழுப்பு அமிலங்கள் அதிகம் இருக்கின்றன. இது தலைமுடியின் வேர்க்கால்களுக்கு அவசியமானது.
இது தலைமுடியை நன்கு வளரச் செய்வதுடன் தலைமுடி உடைதல் மற்றும் நுனியில் உள்ள முடி வெடிப்புகளைச் சரி செய்கிறது.
ஆனால், தேங்காய் எண்ணெய்யை பலரும் சரியான முறையில் பயன்படுத்தாததாலேயே முடி உதிர்தல் பிரச்னை ஏற்படுகிறது.
தேங்காய் எண்ணெய்யை முடியின் வேர்க்கால்களில் படும்படி சில நிமிடங்களுக்கு நன்கு மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் ஒரு 20-30 நிமிடங்கள் விட்டு குளிக்கலாம்.
இரவு தூங்கப்போகும் முன்பாகவும் தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்துவிட்டு காலையில் குளிக்கலாம். இது வேர்க்கால்களில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.
மேலும், பலன்களைப் பெற தேங்காய் எண்ணெய்யுடன் விளக்கெண்ணெய் அல்லது ரோஸ்மேரி எண்ணெய்யை கலந்து பயன்படுத்தலாம்.
மிகவும் வறட்சியான அல்லது உடைந்த முடிகளுக்கு இது சிறந்த கண்டிஷனராக இருக்கும். வாரத்திற்கு இரு முறை தேய்த்து குளிக்கலாம்.
சுத்தமான செக்கு தேங்காய் எண்ணெய்களைப் பயன்படுத்த வேண்டும். குளிப்பதற்கு ரசாயனம் அல்லாத / ரசாயனம் குறைந்த ஷாம்பூக்களைப் பயன்படுத்த வேண்டும்.
தொடர்ந்து தேங்காய் எண்ணெய்யை இப்படி பயன்படுத்தும்போது நல்ல பலன்களைப் பெறலாம்.
[பொறுப்புத் துறப்பு: இந்தச் செய்திகள் / தகவல்கள் மருத்துவ நூல்கள், இணைய தளங்கள், அனுபவப் பகிர்வுகள் அடிப்படையில் தொகுத்துத் தரப்படுகிற பொதுவான ஆலோசனைகள் மட்டுமே. எந்தவொன்றையும் செயல்படுத்தும் முன் உரிய மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதே நல்லது. எந்த விதத்திலும் ‘தினமணி’ பொறுப்பாகாது.]
இதையும் படிக்க | உடல் எடை அதிகரிப்பது தைராய்டு அறிகுறியா? - நம்பிக்கையும் உண்மையும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.