மின்விளக்கு வசதி இல்லாததால் வாக்குச்சாவடி அலுவலர்கள் அவதி
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் மின்விளக்கு வசதி இல்லாததால் வாக்குச்சாவடி அலுவலர்கள் அவதிப்பட்டனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவுக்கு தயாராகிக் கொண்டிருந்த நிலையில் போதிய மின்விளக்கு வசதி இல்லாததால் வாக்குச்சாவடி அலுவலர்கள் அவதிப்பட்டனர். பின்னர் செல்லிடப்பேசி ஒளியை பயன்படுத்தி பணிகள் துவங்கப்பட்டது.
தொடர்ந்து, மற்றொரு வாக்குச்சாவடி ஒன்றில் வாக்குப்பெட்டியை தயார் செய்தபோது அதனை சரியாக மூட முடியாததால் வாக்குப்பதிவு அரை மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது.