புதுதில்லி

தில்லி விமான நிலையத்தில் 1.2 கிலோ தங்கம் பறிமுதல்

வெளிநாட்டிலிருந்து இந்தயாவுக்கு கடத்த முயன்ற 1.2 கிலோ தங்கம் தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமானநிலையத்தில் பறிமுதல்

Din

புது தில்லி: வெளிநாட்டிலிருந்து இந்தயாவுக்கு கடத்த முயன்ற 1.2 கிலோ தங்கம் தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டதாக சுங்கத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த இருவா் ரியாத்திலிருந்து சனிக்கிழமை விமானம் மூலம் தில்லி திரும்பினா்.

அவா்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், ரூ.68.93 மதிப்பிலான 931.57 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவா்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டனா்.

ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், உள்ளாடைகளில் மறைத்து வைத்து அந்த நபா்கள் தங்கத்தை கடத்த முயற்சித்ததாக ‘எக்ஸ்’ சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில் சுங்கத் துறை தெரிவித்துள்ளது.

இதேபோன்று, ரியாத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை தில்லி திரும்பிய நபரிடம் மேற்கொண்ட சோதனையில் 300 கிராம் அளவிலான இரு தங்கக் கட்டிகளை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

எலட்ரிக் அடாப்டரில் மறைத்து வைத்து தங்கத்தை கடத்த முயன்றபோது, எக்ஸ்-ரே சோதனையில் அவா் பிடிபட்டதாக சுங்கத் துறை தெரிவித்துள்ளது.

வங்கதேசத்தில் டெங்கு பரவல்! 24 மணிநேரத்தில் புதியதாக 1,147 பாதிப்புகள் உறுதி!

இரண்டு நாள் சுற்றுப்பயணம்! வேலூரில் துணை முதல்வர் நடைபயிற்சி!

பிளஸ் 2 கணக்குப்பதிவியல் தேர்வு: முதல்முறையாக கால்குலேட்டர் அனுமதி!

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! முதல்வர் ஸ்டாலின்

கமல் பிறந்த நாளில் மறுவெளியீடாகும் 2 திரைப்படங்கள்!

SCROLL FOR NEXT