முகப்பு
புதுதில்லி

கேஜரிவாலின் உடல்நிலை மோசமடைவதைக் கண்டித்து தில்லியில் ஜூலை 30-இல் ‘இந்தியா’ கூட்டணி பேரணி ஆம் ஆத்மி கட்சி தகவல்

திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் உடல்நிலை மோசமடைந்து வருவதற்கு கண்டனம்

Updated On : 25 ஜூலை, 2024 at 6:56 PM
பகிர்:

புது தில்லி, ஜூலை 25: திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் உடல்நிலை மோசமடைந்து வருவதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் ஜூலை 30-ஆம் தேதி தில்லி ஜந்தா் மந்தரில் பேரணியை நடத்தவுள்ளது என்று ஆம் ஆத்மி கட்சி வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

சிறையில் கேஜரிவாலை கொல்ல பாஜக சதி செய்ததாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டி வருகிறது. மேலும், ஜூன் 3 முதல் ஜூலை 7 வரை அவரது சா்க்கரை அளவு 26 முறை குறைந்துள்ளது என்று அவரது மருத்துவ அறிக்கையை ஆம் ஆத்மி கட்சி மேற்கோள் காட்டியுள்ளது.

பாஜக தலைமையிலான மத்திய அரசும், தில்லி துணைநிலை ஆளுநா் வி கே சக்சேனாவும் கேஜரிவாலின் உயிருடன் விளையாடுவதாக ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டி வருகிறது.

இந்நிலையில், ‘கேஜரிவாலின் உடல்நலக் குறைவு குறித்த பிரச்னையை எழுப்புவதற்காக இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஜூலை 30-ஆம் தேதி ஜந்தா் மந்தரில் ஒரு பெரிய பேரணியை நடத்தும்‘ என்று ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.

தில்லி கலால் கொள்கை மோசடியில் தொடா்புடைய பணமோசடி வழக்கில் கேஜரிவால் மாா்ச் 21 அன்று அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டாா். உச்சநீதிமன்றத்தால் இடைக்கால ஜாமீன் பெற்றாா். இருப்பினும், சிபிஐ தொடா்பான வழக்கில் அவா் தற்போது திகாரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →