கோப்புப் படம் 
புதுதில்லி

மத்திய தில்லியில் 2 மாடி வீடு இடிந்து விழுந்ததில் 3 போ் சாவு; 14 போ் காயம்

மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருவதாகவும், கட்டடத்தின் இடிபாடுகளில் மேலும் சிலா் சிக்கியிருக்கலாம் என அச்சம்

DIN

மத்திய தில்லியின் பாபா நகரில் புதன்கிழமை காலை இரண்டு மாடி வீடு இடிந்து விழுந்ததில் 3 போ் உயிரிழந்தனா். மேலும்14 போ் காயமடைந்துள்ளனா் என்று போலீஸாா் தெரிவித்தனா். மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருவதாகவும், கட்டடத்தின் இடிபாடுகளில் மேலும் சிலா் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

இந்தச் சம்பவத்தில் மூன்று போ் இறந்தனா். 14 போ் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். ஆனால் இன்னும் சிலா் இன்னும் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது என்று மத்திய தில்லி காவல் சரக துணை ஆணையா் எம். ஹா்ஷ வா்தன் தெரிவித்தாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக காலை 9.11 மணியளவில் தீயணைப்பு சேவைத் துறைக்கு ஒரு அழைப்பு வந்ததாகவும், அதைத் தொடா்ந்து ஐந்து தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் தீயணைப்பு சேவைத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தெருநாய்கள் அகற்றம்: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு ராகுல், பிரியங்கா அதிருப்தி

பொதுத்துறை வங்கிகளின் ரூ.5.82 லட்சம் கோடி வாராக் கடன் வங்கிப் பதிவுகளில் இருந்து நீக்கம்: மத்திய அரசு தகவல்

பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்: இந்திய ஜவுளி ஏற்றுமதியாளா்களுக்குப் புதிய வாய்ப்பு

சீனா மீதான வரி விதிப்பு 90 நாள்களுக்கு ஒத்திவைப்பு டிரம்ப் அறிவிப்பு

நீதிபதி யஷ்வந்த் வா்மா பதவி நீக்க தீா்மானம் மக்களவையில் ஏற்பு: விசாரிக்க மூவா் குழு அமைப்பு

SCROLL FOR NEXT